[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

பெங்களூருவில் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்

karnataka-congress-leaders-meeting-underway-in-bengaluru-following-the-defeat-of-congress-jd-s-government-during-the-trust-vote-in-assembly-yesterday

நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்ததை அடுத்து, காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

குமாரசாமி கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது நேற்று கர்நாடக சட்டசபையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், குமாரசாமி அரசு தோல்வியைத் தழுவியது. உடனடியாக குமாரசாமி தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கர்நாடகாவில் மாலை 3 மணிக்கு நடைபெற உள்ள பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், சட்டமன்றக் கட்சித் தலைவராக எடியூரப்பா ஒருமனதாக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

              

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் இன்று மதியம் நடைபெற்றது. இதில், சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மும்பையில் இருந்து கர்நாடகா வரவுள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close