[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்

dmk-and-its-alliance-parties-protest-against-next-exam-in-parlilament-outside

மருத்துவ படிப்புக்கான நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எம்டி மற்றும் எம்எஸ் ஆகிய முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைமுறையை கைவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் அதற்குப் பதிலாக NATIONAL EXIT TEST அதாவது தேசிய நிறைவு நிலைத் தேர்வு என்ற பெயரில் புதிதாக தேர்வு நடத்த உள்ளதாக தெரிகிறது.

இதனால் எம்பிபிஎஸ் படிப்பு முடித்த பிறகு மருத்துவ பணியை தொடங்குவதற்கான உரிமம் பெறுவதற்கு தனித் தேர்வு எழுத தேவையில்லை என்றும், தேசிய நிறைவு நிலைத் தேர்வு முடிவுகளே போதுமானது என்றும் திருத்தப்பட்ட தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் ஒரு அம்சம் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. இம்மசோதா விரைவில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன், கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். திருச்சி சிவா, கனிமொழி, ஆ.ராசா, திருமாவளவன், சு.வெங்கடேசன், வசந்தகுமார் உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக, தேசிய அளவிலான நெக்ஸ்ட் தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என திமுக எம்.பி.யான கனிமொழி நேற்று மக்களவையில் வலியுறுத்தினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close