[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரான்ஸில் இன்று நடைபெறும் ஜி7 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
  • BREAKING-NEWS உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
  • BREAKING-NEWS லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் உள்பட இருவர் கேரளாவில் கைது

‘தெலுங்கு தெலிது.. தமிழில் மாட்லாடு’ - சிரிப்பலையில் மூழ்கிய பேரவை

minister-jayakumar-humares-speech-create-more-laugh-in-tn-assembly

சட்டப்பேரவையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் தெலுங்கில் பேசிய போது, குறுக்கிட்டு பேசிய அமைச்சர் ஜெயக்குமார் ‘தெலுங்கு தெலிது.. தமிழில் மாட்லாடு’ எனக் கூறியதால் சிரிப்பலை எழுந்தது.

சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாதத்தில் பேசிய தளி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், பல்வேறு பிரச்சினைகளை தமிழில் பேசி வந்தார். அப்போது, திடீரென தெலுங்கில் தனது தொகுதி பிரச்சினை குறித்து பேசினார். அதனையடுத்து,  சபாநாயகர் குறுக்கிட்டு, ‘மொழிமாற்றம் செய்யும் வசதி சட்டபேரவையில் இல்லை. நீங்கள் பேசியது அவை குறிப்பிலும் பதிவாகாது. எனவே எல்லோருக்கும் புரியும் வகையில் தமிழில் பேசுங்கள்’ என்றார். 

                           

மீண்டும் தெலுங்கில் பிரகாஷ் பேச முன்பட்டபோது, அமைச்சர் ஜெயக்குமார் குறுகிட்டு, ‘ மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பல மொழிகள் தெரியும், ஆனால் எங்களுக்கு தெரியாது. தெலுங்கு தெலிது தமிழிலே மாட்லாடு’ என்று தெலுங்கு கலந்த தமிழில் உறுப்பினரிடம் வலியுறுத்தினார். அமைச்சர் ஜெயக்குமாரின் பதிலால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

                 

இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், தமிழில் பேச தொடங்கினார். கடந்த சட்டபேரவையில் ஓசூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கோபிநாத் அடிக்கடி தெலுங்கில் பேசுவார். அதற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தெலுங்கிலேயே பதில் அளிப்பார் என்பது நினைவுகூறத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close