[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி
  • BREAKING-NEWS தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்
  • BREAKING-NEWS சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி

மாநிலங்களவை தேர்தல் - வேட்பு மனுவை வாபஸ் பெற்றார் என்.ஆர். இளங்கோ 

rajyasabha-candidate-n-r-ilango-withdraw-his-nomination

வைகோவின் வேட்பு மனு ஏற்கபட்டதால் தனது மனுவை என்.ஆர். இளங்கோ வாபஸ் பெற்றார். 

6 பேருக்கான மாநிலங்களவை தேர்தலில் என்.ஆர். இளங்கோ உட்பட 7 பேரின் மனு ஏற்கப்பட்டிருந்தது. தேச துரோக வழக்கில் வைகோவிற்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதால் அவரின் மனு நிராகரிக்கப்படலாம் என சந்தேகம் எழுந்தது. 

இதையடுத்து ஒருவேளை வைகோவின் மனு நிராகரிக்கப்பட்டால் அவருக்கு மாற்று ஏற்பாடாக திமுகவை சேர்ந்த என்.ஆர். இளங்கோ வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். வைகோவின் மனு ஏற்கப்பட்டால் என்.ஆர். இளங்கோவின் மனு வாபஸ் பெறப்படும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் தற்போது வைகோவின் வேட்பு மனு ஏற்கப்பட்டதையடுத்து என்.ஆர். இளங்கோ தனது மனுவை வாபஸ் பெற்றுள்ளார். இதனால் போட்டியின்றி வைகோ, சண்முகம், அன்புமணி, முஹமத் ஜான், வில்சன் சந்திரசேகரன் ஆகிய 6 பேரும் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close