[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

மாநிலங்களவை தேர்தல் : அதிமுக வேட்பாளர்கள் யார்?

who-is-the-rajyasabha-election-candidates-in-aiadmk

அதிமுக சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழகத்தில் வரும் 18 ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் திமுக மற்றும் அதிமுகவிற்கு தலா 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கும். திமுகவைப் பொறுத்தவரை இரண்டு இடங்களுக்கு தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த வில்சன் ஆகியோரை வேட்பாளர்களாக அறிவித்து விட்டது. மூன்றாவது இடம் மதிமுக‌வுக்கு வழங்கப்பட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுகிறார். 

Related image

இந்த நிலையில், அதிமுக சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் ஒப்பந்தப்படி ஓரிடத்தை கூட்டணி கட்சிக்கு வழங்கிவிட்டு எஞ்சிய இரண்டு இடங்களில் அதிமுக போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் முன்னாள் சபாநாயகர் தம்பிதுரை, கே.பி.முனுசாமி, ‌நத்தம் விஸ்வநாதன், கோகுல இந்திரா, வேணுகோபால், மைத்ரேயன், தமிழ்மகன் உசேன், அன்வர் ராஜா, வைகைச்செல்வன், பொன்னையன், மனோஜ் பாண்டியன் ஆகியோரில் இருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. 

முன்னதாக மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் எம்பிக்கள் வேணுகோபால், அன்வர் ராஜா ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினர். மற்றொரு புறம் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வத்தை, முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, முன்னாள் எம்பிக்கள் மனோஜ் பாண்டியன், மைத்ரேயன் ஆகியோர் சந்தித்து பேசினர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close