[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

நூற்றுக்கும் அதிகமான தலைவர்கள் ராஜினாமா - காங்கிரசில் என்னதான் நடக்கிறது?

mass-resignations-divide-congress-as-rahul-gandhi-adamant-on-quitting-as-party-boss

மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

மக்களவை தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பலரும் ராஜினாமா செய்து வந்தனர். ராகுல் காந்தியும் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கூறியதாக தகவல்கள் வெளியானது. ஆனால், ராகுல் காந்தியை தலைவராக தொடர வேண்டும் என அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் ராகுலே தலைவராக தொடர வேண்டும் என கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், ராகுல் காந்தி தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதனையடுத்து, ராஜினாமா செய்யும் தலைவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட தலைவர்கள் இதுவரை ராஜிமானா செய்துள்ளனர். 17 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதனால், அந்த மாநிலங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் வரிசையாக ராஜினாமா செய்து வருகின்றனர்.

  

தெலங்கானா பொறுப்பாளர் பூனம் பிரபாகர், பீகார் பொறுப்பாளர் வீரேந்திர ரத்தோர், இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் ஸ்ரீனிவாஸ், டெல்லி காங்கிரஸ் செயல் தலைவர் ராஜேஷ் லிலோதியா மற்றும் அனில் சவுத்ரி, மத்திய பிரதேச பொறுப்பாளர் தீபக் பாப்ரியா, கோவா பொறுப்பாளர் கிரிஷ் சவுதன்கர் உள்ளிட்டோர் ராஜினாமா செய்துள்ளனர். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்வதாக ராகுல் காந்திக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். 

நூற்றுக்குக்கும் மேற்பட்ட தலைவர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளது காங்கிரஸ் கட்சியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தியின் ராஜினாமாவும் உறுதி செய்யும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சியில் பெரிய மாற்றம் ஏற்படும். ராகுல் காந்தி தலைவராக தொடர ஒருசதவீதம் கூட வாய்ப்பில்லை என வீரப்ப மொய்லி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close