[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

தேர்தல் முடிவுகள் குறித்த கருத்து கூற தடை - அதிமுக அறிவிப்பு

admk-message-to-cadres

தேர்தல் முடிவுகள் குறித்த தங்கள் பார்வைகள் பற்றியோ, அல்லது அதிமுகவின் முடிவுகள் பற்றியோ தொண்டர்கள யாரும் பொதுவெளியில் கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அதிமுக தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்பதை மறந்துவிட வேண்டாம் எனத் தெரிவித்துள்ளனர். கருத்துக்களை யார் கூற விரும்பினாலும் அதற்கனெ செயற்குழு, பொதுக்குழு, ஆலோசனைக் கூட்டம் எனப் பல்வேறு வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். 

நம்மை அழிக்க நினைப்பவர்களுக்கும், ஒரு நாளேனும் முதலமைச்சர் பதவியில் அமர்ந்து விட வேண்டும் என்ற நினைப்பில் பிதற்றிக் கொண்டிருப்பவர்களுக்கும், நம் சொல்லும், செயலும் உதவி செய்திடக் கூடாதல்லவா என்பதையும் அவர்கள் தங்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close