[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

“காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுகவை விலக சொல்லவில்லை” - கே.என். நேரு விளக்கம்

k-n-neru-explain-about-congress-dmk-speech

காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக விலக வேண்டும் என நான் கூறவில்லை என திமுகவின் மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார். 

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னையை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி திருச்சியில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கே.என்.நேரு கலந்துகொண்டு பேசினார். அப்போது  காங்கிரசுக்கு இன்னும் எத்தனை காலம்தான் திமுக பல்லக்கு தூக்குவது என கேள்வி எழுப்பினார். 

மேலும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்றும் இது குறித்து கட்சித் தலைமையிடம் வலியுறுத்துவேன் என்றும் அவர் தெரிவித்தார். திமுகவைச் சேர்ந்த கே.என்.நேருவின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், இந்த பேச்சு குறித்து கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், “திமுக அதிக இடங்களில் வெற்றி பெறவேண்டும். காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக விலக வேண்டும் என நான் கூறவில்லை. திமுக தலைவருக்கு முழுமையாக கட்டுப்பட்டுவன் நான். உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும் என்பது கலகத்தின் குரல் அல்ல. ஒரு மாவட்ட செயலாளராக எனது கருத்தை நான் கூறினேன். 

முடிவெடுக்கும் இடத்தில் நான் இல்லை. அனைத்து முடிவுகளையும் தலைவர் ஸ்டாலின் எடுப்பார். காலையில் நான் பேசியதற்கு கட்சியில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. நானே தன்னிச்சையாக தற்போது பேட்டி அளிக்கிறேன். நான் ஒரு திமுககாரர். திமுகதான் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்றுதான் நினைப்பேன். அதேபோல் திமுககாரர்தான் மேயராக வேண்டும் எனவும் நினைப்பேன். உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை கேட்போம் என காங்கிரஸ் கூறியதாக சில செய்திகளில் படித்தேன். அதன் அடிப்படைலேயே இந்த கருத்தை கூறினேன்” எனத் தெரிவித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close