[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

“ராமர் கோயில் கட்ட மோடிக்கு தைரியம் உண்டு” - உத்தவ் தாக்கரே கருத்து

pm-modi-has-courage-should-bring-ordinance-to-construct-ram-temple-uddhav-thackeray-in-ayodhya

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அவசர சட்டம் கொண்டுவர பிரதமர் மோடிக்கு தைரியம் உள்ளது என்று சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 

அயோத்தி விவகாரம் உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில், தீர்ப்பு வரும் வரை காத்திருக்காமல் அவசர சட்டம் கொண்டு வந்து ராமல் கோயில் கட்ட வேண்டும் என்று விஹெச்பி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், நீதிமன்ற உத்தரவுபடிதான் நடப்போம் என பாஜக கூறிவருகிறது. ஆனால், பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனா அவசர சட்டம் கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி வருகிறது.

            

அயோத்திக்கு சென்று பல்வேறு கூட்டங்களை சிவசேனா நடத்தி வருகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியுள்ள நிலையில், சிவசேனா எம்.பிக்கள் அயோத்தி சென்று பின்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தனர். நாடாளுமன்றத்தில் பாஜக 300க்கு மேல் எம்.பிக்களை கொண்டு அதிக பலத்துடன் உள்ளது. கூட்டணி கட்சிகளுடன் சேர்த்தால் 350 எம்பிக்களுக்கு மேல் பாஜக வசம் உள்ளது.

         

இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அவசர சட்டம் கொண்டுவர பிரதமர் மோடிக்கு தைரியம் உள்ளது என்று சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து உத்தவ் தாக்கரே கூறுகையில், “அயோத்தி விவகாரம் நீதிமன்றத்தில் நீண்ட காலமாக இருக்கிறது. தற்போது அரசாங்கம் மிகவும் வலிமையாக உள்ளது. நாங்களும் உடன் இருக்கிறோம். முடிவை எடுப்பதற்கான தைரியம் பிரதமர் மோடிக்கு உண்டு. ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று அரசாங்கம் முடிவு எடுத்தால் அதனை ஒருவரும் தடுத்து நிறுத்த மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close