[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

சென்னை குடிநீர் பிரச்னைக்கு பலமுறை ஆண்ட திமுக செய்த நிரந்தர தீர்வு என்ன? - தமிழிசை கேள்வி 

tamilisai-asks-question-to-stalin-about-water-issue

தண்ணீர் பிரச்னைக்கு திமுக செய்து முடித்த தொலைநோக்குத் திட்டங்கள் என்ன என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக மக்களின் உணர்வுகளை தமிழக சட்டமன்றத்தின் உணர்வுகளை நிதி ஆயோக் கூட்டத்தில் முறைப்படியும், முனைப்புடனும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதிரொலிக்கவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், தமிழகமெங்கும் மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அலைபாய்ந்து கொண்டிருக்கும் நிலையில், டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்களுக்கு எந்த ஆக்கபூர்வமான திட்டங்களையும் கேட்டுப்பெறாமல், தனது கட்சியின் சொந்த பஞ்சாயத்து பேசிவிட்டு திரும்பியிருப்பதாக தெரிவித்திருந்தார். 

தலைநகர் டெல்லியில் தமிழக உரிமைகளை தாரை வார்த்து கொடுத்துவிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெறுங்கையுடன் திரும்பியுள்ளதாகவும் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை குடிநீர் பிரச்சனைக்கு பலமுறை ஆண்ட திமுக செய்த நிரந்தர தீர்வு என்ன என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். 

 

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “சென்னையை சிங்கப்பூர் ஆக்குவதாக சொன்ன ஸ்டாலின் அவர்களே வீராணம் குழாயில் ஊழல், கூவத்தில் படகு விடுவதாக ஊழல், சென்னையை சுற்றிலும் ஏரிகுளங்கள் காணாமல் போனதும், ஆற்று மணல் கொள்ளை போனதும் திமுக ஆட்சி காலத்தில்தானே. சென்னை குடிநீர் பிரச்சனைக்கு பலமுறை ஆண்ட திமுக செய்த நிரந்தர தீர்வு என்ன? தொலைக்காட்சி வழங்கி தேர்தல் வெற்றி தேடிய நீங்கள் தண்ணீர் பிரச்சினைக்கு  செய்துமுடித்த தொலைநோக்குத் திட்டங்கள் என்ன?தினம் ஒரு அறிக்கைதான் தீர்வாகுமா?” என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close