[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

மாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கிறதா தேமுதிக?

dmdk-loses-state-party-status

மக்களவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் 2.19 ஆக குறைந்ததால் தேமுதிகவின் கட்சி அங்கீகாரம் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாநில கட்சிக்கான அங்கீகாரம் பெறுவதற்கு, மாநிலத்தில் பதிவான வாக்குகளில் 6 சதவீத வாக்குகளை ஒரு கட்சி பெற வேண்டும். அதோடு, ஒரு மக்களவை தொகுதி அல்லது 2 சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்பதும் தேர்தல் ஆணையத்தின் விதி.

2005-ஆம் ஆண்டு விஜயகாந்த் தேமுதிகவை தொடங்கினார். ஓராண்டிலேயே தேர்தலில் தனித்து போட்டியிட்ட தேமுதிக 8.38 சதவீத வாக்குகளை பெற்றது. அதற்கடுத்து 2009ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் தனித்து போட்டியிட்ட தேமுதிக 10.3 சதவீத வாக்குகளை பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. 2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் போட்டியிட்ட தேமுதிகவின் வாக்கு சதவீதம் 7.9 ஆக குறைந்தது. 2014-ல் அது 5.1ஆக சரிந்தது.

தொடர்ந்து 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிகவின் வாக்குசதவீதம் 2.39 ஆகியது. இந்தநிலையில், 2019 மக்களவைத் தேர்தலிலும் வாக்கு சதவீதம் 2.19 ஆக குறைந்துள்ளது. தொடர்ந்து 2-ஆவது முறையாக 3 சதவீதத்திற்கும் குறைவாக வாக்குசதவீதம் பெற்றிருப்பதால் தேமுதிகவின் மாநில கட்சி அந்தஸ்து ரத்தாகும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், இனிவரும் தேர்தல்களில் தேமுதிக தனது முரசு சின்னத்தில் போட்டியிடுவதற்கான வாய்ப்பும் குறைவே என்றும் கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close