[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

“தேர்தல் முடிவுக்குப் பின் காங். எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு வருவார்கள்” - எடியூரப்பா

20-congress-mlas-will-join-bjp-after-vote-counting-on-may-23-bs-yeddyurappa

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த உடன் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 20 பேர் பாஜகவில் இணைவார்கள் என்று கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், கர்நாடக அரசியலில் மீண்டும் குழப்பமான சூழல் உருவாகியுள்ளது. கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் எம்எல்ஏவுமான ரோஷன் பெய்க் மாநில கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.‌ 

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தோ‌ற்கும் பட்சத்‌தில் அதற்கு முன்னாள் முதல்வர்‌ சித்தராமையாவும் மாநில‌ காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவுமே காரணமாக இருப்பார்கள் என ரோஷன் பெய்க் கூறியுள்ளார். ‌இருவரும் மாநிலத்தில் கட்சியை தவறான முறையில் வழி‌நடத்தி வருவதாகவும் பெய்க் குற்றஞ்சாட்டியுள்ளார். கர்நாடக மாநில காங்கிரஸ் மேற்பார்வையாளராக உள்ள கே.சி. வேணுகோபால் ஒரு கோமாளி என்றும் இவரை போன்றவர்களுக்குப் பொறுப்பு கொடுத்த ராகுல் காந்தியை நினைத்து பரிதாபப்படுவதாகவும் பெய்க் தெரிவித்துள்ளார். 

              

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த உடன் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 20 பேர் பாஜகவில் இணைவார்கள் என்று கர்நாடக பாஜக தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார். இதுகுறித்து எடியூரப்பா, “தேர்தலுக்குப் பிந்தையை கருத்துக் கணிப்புகள் பலவும் கர்நாடகாவில் பாஜக 20-23 இடங்களை கைப்பற்றும் என்று தெரித்துள்ளன. தேர்தல் பரப்புரை தொடங்கியது முதல் பாஜக 22 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறிவருகிறேன். காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவர்கள் தோல்வியை தழுவார்கள் என்றும் தெரிவித்தேன்.

மே 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு, கர்நாடக அரசியலில் நிறைய மாற்றங்கள் அரங்கேறும். 20-22 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைவார்கள். அவர்களுக்கு தற்போதைய கூட்டணி பிடிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close