[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

“நான் கொல்லப்பட வேண்டுமென மோடி விரும்புகிறார்” - கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

pm-wants-me-dead-shocker-from-arvind-kejriwal

தான் கொல்லப்பட வேண்டுமென பிரதமர் மோடி விரும்புவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். 

யூனியன் பிரதேசமான டெல்லியில் காவல்துறை மத்திய உளவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி தலைமையிலான அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே தொடர்ச்சியாக மோதல் போக்கு நிலவி வருகிறது. காவல்துறையை டெல்லி அரசின் கட்டுப்பாட்டில் விட்டுவிடுமாறு முதல்வர் கெஜ்ரிவால் வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை போல் தன்னுடைய பாதுகாப்பு காவலரால் தான் கொல்லப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லி காவல் உதவி ஆய்வாளர் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான விஜய் கோயலுக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடையே ட்விட்டரில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. 

             

டெல்லியில் காவல் உதவி ஆய்வாளர் விவேக் விஹார் என்பது நேற்றிரவு கொல்லப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து கெஜ்ரிவால் தன்னுடைய ட்விட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார். அதில், டெல்லி மக்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பேற்பது என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் விஜய் கோயல், “உங்களது சொந்த பாதுகாவலர்கள் மீதே சந்தேகத்தை எழுப்புவது வருத்தமாக உள்ளது. டெல்லி காவல் துறைக்கு தவறான பெயரினை கொடுக்காதீர்கள். உங்களது தனிப்பட்ட பாதுகாவலர்களை தேவைப்பட்டால் நீங்களே தேர்வு செய்துகொள்ளலாம். உங்களுக்கு ஏதேனும் உதவி தேவையென்றால் தெரியப்படுத்துங்கள். நீங்கள் நீண்ட ஆயுள் வாழ வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

              

விஜய் கோயலுக்கு தன்னுடைய ட்விட்டரில் பதிலளித்த கெஜ்ரிவால், “விஜய்ஜி, என்னுடைய பாதுகாப்பு காவலர் அல்ல, நான் கொல்லப்பட வேண்டும் என மோடிதான் விரும்புகிறார்” கடுமையாக சாடியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close