[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜக விருந்து - ஓபிஎஸ், ஈபிஎஸ் பங்கேற்பு

ahead-of-the-counting-of-votes-in-the-lok-sabha-elections-the-bjp-has-called-a-meeting-of-nda-leaders-in-the-national-capital-on-tuesday

மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், நாளை கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜக நாளை விருந்து அளிக்கவுள்ளது.

மத்திய ஆட்சியை தீர்மானிக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் 7 கட்டங்களாக நேற்றுடன் முடிந்துள்ளது. இதையடுத்து 23ஆம் தேதி வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து நாடே காத்திருக்கிறது. தேசிய ஊடகங்கள் வெளியிட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில், பாஜகவே பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளன.

               

இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளில் முக்கிய தலைவர்களுக்கு நாளை விருந்து அளிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதில் பங்கேற்க கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விருந்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்பார்கள். அதேபோல், பாஜகவின் முக்கிய அமைச்சர்கள் பலரும் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது. இந்த விருந்தின் போது முக்கிய ஆலோசனைகளும் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

              

முன்னதாக, மே 21 ஆம் தேதி டெல்லியில், காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவரான சோனியா காந்தியே இதற்கு அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த ஆலோசனை மம்தா, மாயாவதி உள்ளிட்டோர் பங்கேற்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

         

கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா நாளை விருந்து அளிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், இன்று இரவு 9 மணிக்கு துணைமுதல்வர் ஓபிஎஸ் டெல்லி பயணம் செய்கிறார். அதேபோல், நாளை காலை 9 மணிக்கு முதல்வர் பழனிசாமி டெல்லி செல்கிறார். இருவரும் நாளை பாஜக சார்பில் நடக்கும் விருந்தில் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது. காங்கிரஸ், பாஜக இருகட்சிகளும் தங்களது கூட்டணி கட்சி தலைவர்களை நாளை சந்திக்கவுள்ளதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close