[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS 5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்
  • BREAKING-NEWS காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்

“கலைஞர் மகன் அரசியலில் நீடிக்க வேண்டும்” - தமிழிசை மழுப்பல்

tamilisai-answered-the-question-that-mk-stalin-said-that-would-quit-politics-if-proved-the-accused-of-talks-with-bjp

தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜகவுடன் திமுக பேசியது என நான் கூறியது உண்மைதான் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “பாஜகவுடன் திமுக பேசியதாக எனக்கு வந்த தகவலின் அடிப்படையில் கூறினேன். நான் சொல்வதில் எப்போதும் உண்மை இல்லாமல் இருக்காது. என்னை அரசியலை விட்டு விலகச் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. 

கலைஞரின் மகன் மு.க.ஸ்டாலின் அரசியலில் அதிக நாட்கள் இருக்க வேண்டும் என்பதுதான் எங்களின் ஆசை. நான் கூறியது உண்மையா, இல்லையா என்பதை ஸ்டாலின் நிரூபிக்கட்டும். எப்போது வேண்டுமானாலும் நான் நிரூபிப்பேன். அரசியலில் எந்த நேரத்தில் நிரூபிக்க வேண்டுமோ அப்போது நிரூபிப்பேன். என்னுடைய அரசியல் வாழ்க்கை என்றும் நேர்மையானதுதான்” என்று கூறினார். 

          

முன்னதாக, பாஜகவுடன் தான் பேசி வருவதாக பச்சைப் பொய் கூறிய தமிழிசைக்கு கண்டனம் தெரிவிப்பதாக ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறியிருந்தார். அதேபோல், “தமிழிசை அல்லது நரேந்திர மோடியோ மத்தியில் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க நான் அவர்களுடன் பேசி வருகிறேன் என்பதை நிரூபித்து விட்டால் அரசியலில் இருந்து விலக நான் தயார். அப்படியில்லை என்றால் மோடியும், தமிழிசையும் பதவி விலக தயாரா?” என்றும் சவால் விடுத்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close