[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்?- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
  • BREAKING-NEWS வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS 10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து
  • BREAKING-NEWS காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது

“அப்படி பேசியதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும் பிட்ரோடா” - ராகுல் காந்தி காட்டம் 

you-should-be-ashamed-rahul-gandhi-hits-out-sam-pitroda

சீக்கியர்கள் படுகொலை குறித்து அலட்சியமாக பதிலளித்ததற்காக சாம் பிட்ரோடா வெட்கப்பட வேண்டும் என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

1984 ஆம் ஆண்டு சீக்கிய கலவரத்துக்கும் அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்திக்கும் தொடர்பு இருப்பதாக நானாவதி கமிஷன் கூறியிருந்தது. இதைச் சுட்டிக்காட்டி பாஜக, காங்கிரஸை விமர்சித்து வருகிறது. இந்த சூழலில் சீக்கியர் படுகொலை பற்றிய கேள்விக்கு “அது 1984-ல் நடந்தது. அதற்கு என்ன?” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா கேட்டிருந்தார். இதனை தேர்தல் பரப்புரையின் போது விமர்சித்த மோடி, “காங்கிரஸ் கட்சியை நடத்துபவர்களின் ஆணவம் எப்படி இருக்கிறது என்பதை இந்த வார்த்தைகள் மூலம் புரிந்து கொள்ளலாம். அக்கட்சியின் மனநிலையையும், குணநலனையும் இது காட்டுகிறது” என சாடினார். பின்னர் இதுகுறித்து விளக்கம் அளித்த சாம் பிட்ரோடா எனது பேட்டியில் 3 வார்த்தைகளை வைத்து பா.ஜனதா, உண்மையை திரித்து கூறுவதாக குற்றம்சாட்டினார்.

Image result for sam pitroda

இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்தார். அதில்,“சாம் பிட்ரோடாவின் கருத்து ஒரு நாளும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இதை அவரிடம் நான் நேரடியாகவும் தெரிவிப்பேன். தனது கருத்துகளுக்காக பிட்ரோடா மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த கலவரத்துக்கு யார் பொறுப்பாக இருந்தாலும் அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். இந்த விவகாரம் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், என்னுடைய தாய் சோனியா காந்தி, நான் உட்பட அனைவரும் விளக்கம் அளித்துவிட்டோம்.1984 ஆம் ஆண்டு சீக்கிய கலவரம் என்பது மிக மோசமான நிகழ்வு. அது நடந்திருக்கக் கூடாது” என தெரிவித்திருந்தார்.

Image result for Rahul Gandhi To Sam Pitroda For 1984 Remark

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் கன்னா என்ற இடத்தில் தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,  சீக்கியர் படுகொலை குறித்து சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்து தவறானது என்றும் சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு காங்கிரஸ் உடன்படவில்லை என்று விளக்கம் அளித்தார். மேலும் சீக்கியர்கள் படுகொலை குறித்து அலட்சியமாக பதிலளித்ததற்காக சாம் பிட்ரோடா வெட்கப்பட வேண்டும் என கடுமையாக விமர்சித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close