[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

அரசியலில் ஒருபோதும் ‘டூ ப்ளஸ் டூ’ என்பது நான்கு ஆகாது - நிதின் கட்கரி

2-2-is-never-four-in-politics-nitin-gadkari-to-ndtv

அரசியலில் இரண்டுடன், இரண்டை சேர்த்தால் ஒருபோதும் 4 ஆகாது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். என்.டி.டி.விக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். “அரசியலில் இரண்டும், இரண்டும் நான்கு ஆகாது. 1971ம் ஆண்டு இந்திரா காந்திக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மிகபெரிய கூட்டணியை உருவாக்க முயற்சித்தனர். ஆனால், அது வெற்றி பெறவில்லை” என்று கட்கரி கூறியுள்ளார். 

மேலும், அந்தப் பேட்டியில், “பிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இரண்டாவது முறையாக மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும். மோடி திரும்பவும் பிரதமர் ஆவார். நான் ஒன்றும் கருப்பு குதிரை அல்ல. எனக்கென்று தனிப்பட்ட குறிக்கோள் இல்லை. நான் பிரதமர் ஆக விரும்பவில்லை” என்றும் கூறியுள்ளார்.

                        

அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பேசுகையில், “அத்வானி மற்றும் ஜோஷி எங்களுடைய மூத்த தலைவர்கள். 75 வயதிற்கு மேல் உடையவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பது கட்சி எடுத்த முடிவு. நாங்கள் வாரிசு கட்சி நடத்தவில்லை. எங்கள் கட்சியுடைய கொள்கைகள் தெளிவாக உள்ளன. காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி உள்ளிட்ட வாரிசுகளை தவிர்த்து வேறு யாராலும் கட்சியை வழிநடத்த முடியாது” என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close