[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

“காங்கிரசுக்காக காத்திருந்தே கெஜ்ரிவால் சோர்ந்துபோனார்” - அகிலேஷ் விமர்சனம் 

congress-makes-people-wait-so-long-they-get-tired-akhilesh-yadav-on-aap-alliance

காங்கிரஸ் கட்சி நீண்ட நாட்கள் காத்திருக்க வைத்ததால், ஆம் ஆத்மி கட்சியினர் சோர்வடைந்துவிட்டார்கள் என்று அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், வருகின்ற மே 12ம் தேதி 6ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், டெல்லி மாநிலத்தில் உள்ள 7 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. டெல்லியில், காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே கூட்டணி அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆம் ஆத்மி வெளிப்படையாக விருப்பம் தெரிவித்தும் அதனை காங்கிரஸ் நிராகரித்து விட்டது. 

                 

இந்நிலையில், காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே கூட்டணி அமையாமல் போனது குறித்து சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “ஆம் ஆத்மி கட்சியும், அரவிந்த் கெஜ்ரிவாலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க விரும்பினர். காங்கிரஸ் உடன் இணைந்து பணியாற்ற கெஜ்ரிவால் விரும்பினார். ஆனால், காங்கிரஸ் கட்சி அவருடன் இணைந்து செல்ல விரும்பவில்லை. இருப்பினும், அரவிந்த் கெஜ்ரிவால் அதிகப்படியான இடங்களில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை இன்னும் எனக்கு உள்ளது. இந்தக் கூட்டணி அமையாமல் போனதற்கு காங்கிரஸ் கட்சியே பொறுப்பு. 

காங்கிரஸ் ஒரு நல்ல கட்சிதான். ஆனால், நிறைய மக்களை நீண்ட காலம் காத்திருக்க வைத்துவிடுகிறது. அவர்களுடைய இந்தச் செயலால் மற்றவர்கள் களைப்படைந்துவிடுகிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் விவகாரத்திலும் இதுதான் நடைபெற்றிருக்கும்” என்று கூறினார்.

                

2017ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் சமாஜ்வாதி கூட்டணி அமைத்தது. பாஜகவின் மாபெரும் வெற்றியை அந்தக் கூட்டணியாக தடுத்து நிறுத்த முடியவில்லை. தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை கழட்டிவிட்டு பகுஜன் சமாஜ் கட்சியுடன் அகிலேஷ் கூட்டணி அமைத்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close