[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

“உயிர்போகும் நாளில் அதிமுக கொடி போர்த்துவது வாழ்நாள் பெருமை” - ஓபிஎஸ் உருக்கம்

ops-explainations-statement

பாஜகவில் தான் ‌இணைய உள்ளதாக கூறப்படு‌வது வடிகட்டிய பொய்‌ என துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாதாரண பெரியகுளத்தைச் சேர்ந்த தனக்கு பல பெருமைகளை அள்ளித்தந்த அதிமுகவை விட்டு, பாஜகவுக்கு செல்லப்போகிறேன் என்று சில உள்நோக்கம் படைத்த ஊடகங்கள் அடுக்காத ஒருபுரளியை அவதூறாக பரப்பி வருகின்றன என்று கூறிப்பிட்டுள்ளார். அதிமுக கூட்டணி ஈட்ட இருக்கும் மாபெரும் வெற்றியை நினைத்து, குலை நடுக்கம் கொள்ளும் சிலர் வதந்திகளை பரப்பி, தன்னையும், தனது அரசியல் வாழ்க்கையையும் காயப்படுத்த அலைவதை நினைத்து மிகுந்த வேதனை கொள்வதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவை இமையாக காப்பதற்கு தனது ஆயுள் முழுவதையும் கட்சிக்காக ஒப்படைத்து தொண்டாற்றுகிற ஓர் ஊழியன் என்றும், உயிர்போகும் நாளில் அதிமுகவின் கொடி போர்த்து‌தையே வாழ்நாள் பெருமையாக கொண்டுள்ளேன் என்றும் கூறியுள்ளார். அடுக்காத பொய் குற்றச்சாட்டுகளை கழகத்தி‌னரும், தன்மீது நம்பிக்கை கொண்டிருக்கும் தமிழக மக்களும் ஏற்கமாட்டார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close