[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்

“அதிமுக கொடியின் நடுவில் காவியை சேர்த்து கொள்ளட்டும்” - டிடிவி தினகரன் 

ttv-dinakaran-reply-to-chief-minister-edappadi-pazhanisamy

அரசு ஒப்பந்தங்களில் முதலமைச்சரும் திமுகவும் கூட்டாக உள்ளனர் என அமமுகவின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தினகரன் கட்சியான அமமுகவுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறி அதிமுக கொறடா அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்களான ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகியோர் மீது சபாநாயகரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து சபாநாயகர் அந்த 3 எம்.எல்.ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினார்.

இதைத்தொடர்ந்து சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக பேரவை செயலாளர் சீனிவாசனிடம் திமுக மனு அளித்துள்ளனர். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி “அதிமுக எம்.எல்.ஏக்களுக்கும் எதிர்க்கட்சிக்கும் சம்பந்தமே கிடையாது. இன்றைய தினம் திமுகவுக்கும் அமமுகவிற்கும் உள்ள நெருக்கம் வெளிப்பட்டு விட்டது.  அவர்கள் அவருடைய இயக்கத்தை சார்ந்தவர்கள் அல்ல. அப்படி இருக்கும்போது எதிர்க்கட்சி தலைவருக்கு ஏன் இவ்வளவு கோவம் வருகிறது? இதிலிருந்து தினகரன் கட்சிக்கும்  திமுகவிற்கும் எவ்வளவு நெருக்கம் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், “அரசு ஒப்பந்தங்களில் முதலமைச்சரும் திமுகவும் கூட்டாக உள்ளனர். கொறடா மனு அளித்தபோதே சபாநாயகருக்கு எதிராக திமுக தீர்மானம் கொண்டு வந்திருக்க வேண்டும். 3 எம்.எல்.ஏக்களையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என தூண்டுவது போல் திமுக செயல்படுகிறது. சட்டப்போராட்டம் இன்னும் தொடர்கிறது. 

அதனால் 3 எம்.எல்.ஏக்களும் அதிமுக உறுப்பினர்கள்தான். பன்னீர்செல்வத்தை பதவி விலக சொல்லிவிட்டு மீண்டும் போடி தொகுதியில் நிற்க சொல்லுங்கள். பாஜகவின் ஏஜெண்டாக இருந்ததால் தான் பன்னீர்செல்வத்தை பதவியில் இருந்து இறக்கினோம். அதிமுக கொடியின் நடுவில் காவியை சேர்த்து கொள்ளட்டும். எல்லையில் உள்ள வீரர்களுக்கே பாதுகாப்பு இல்லை. அதை வைத்து இவர்கள் அரசியல் செய்கிறார்கள்” எனத் தெரிவித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close