[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி

“40 திரிணாமூல் எம்.எல்.ஏக்கள் எங்கள் பக்கம்” - பிரதமர் மோடி சூசகம்

lok-sabha-elections-2019-in-bengal-pm-modi-says-40-mlas-will-leave-trinamool-after-may-23

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 40 எம்.எல்.ஏக்கள் பாஜகவுடன் தொடர்பில் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

நாடாளுமன்றத் தேர்தலில் நான்காம் கட்ட வாக்குப் பதிவு 72 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில், மேற்குவங்கத்தில் உள்ள எட்டு மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் அதி விரைவுப்படையினருக்கும் இடையே அசன்சோல் தொகுதியில் மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் செரம்பூர் தொகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது, பேசிய மோடி, ‘திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 40 எம்.எல்.ஏக்கள் பாஜகவுடன் தொடர்பில் உள்ளனர். திரிணாமூல் எம்.எல்.ஏக்கள் மம்தாவை விட்டு விலகுவார்கள். ஏனெனில் அவர்களுடைய நம்பிக்கையை நீங்கள் உடைத்துவிட்டீர்கள். அதேபோல், மே 23ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வந்தவுடன் எல்லா பக்கமும் தாமரை மலர்ந்திருக்கும்’ என்று பேசினார். 

                  

மேற்குவங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 294 சட்டமன்ற தொகுதிகளில் 213 எம்.எல்.ஏக்களுடன் திரிணாமூல் காங்கிரஸ் மிகவும் வலுவாக உள்ளது. பாஜக தன் வசம் 3 எம்.எல்.ஏக்களை மட்டும் வைத்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close