[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

“பிரியங்கா பெரிய விமானத்தில் பயணம் செய்கிறார்” - ராகுல் கிண்டல் வீடியோ

what-does-it-mean-to-be-a-good-brother-rahul-gandhi-explains-at-kanpur-meet-with-sister-priyanka

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் விமான நிலையத்தில் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி சந்தித்து நடத்திய வீடியோ  உரையாடல் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி உத்தரபிரதேசத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இருவரும் தங்களின் பிரச்சாரத்தை முடித்து கொண்டு அடுத்தக் கூட்டத்திற்கு செல்ல கான்பூர் விமான நிலையத்திற்கு திரும்பியுள்ளனர். அங்கு அவர்கள் இருவரும் எதிர்பாராத விதமாக சந்தித்துள்ளனர். அப்போது அவர்கள் நடத்திய வீடியோ உரையாடல் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


 
அந்த வீடியோவில் முதலில் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் சந்திக்கும் காட்சிகள் வருகின்றன. இதனையடுத்து ராகுல் காந்தி, “ஒரு நல்ல சகோதரன் என்றால் என்ன தெரியுமா? நான் அதிக தூரம் பயணம் செய்தாலும் சிறிய ரக விமானத்திலேயே பயணம் செய்கிறேன். ஆனால் என்னுடைய சகோதரியோ குறைந்த தூரத்திற்கு பயணம் செய்தாலும் அவர் பெரிய விமானத்தில் பயணம் செய்கிறார். ஆனாலும் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்” எனத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளிக்கு வகையில் பிரியங்கா காந்தி சிரித்து கொண்டே, “இவர் கூறுவது எதுவும் உண்மையல்ல” எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இருவரும் நிழற்படம் எடுத்து கொண்டு தங்களின் ஹெலிகாப்டரில் ஏறி தனி தனியே பயணம் செய்தனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close