[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

“பிரச்சாரச் சூட்டில் பிரதமரை திருடன் என்றேன்” - வருத்தம் தெரிவித்த ராகுல்

rahul-gandhi-regrets-in-court-rafale-comments-made-in-heat-of-campaign

ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை நீதிமன்றமே திருடன் எ‌ன கூறவிட்டது என்ற தன் பேச்சு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்‌தி வருத்தம் தெரிவித்துள்ளார். 

ரஃபேல் வழக்கில் பிரதமர் மோடி திருடன் என்ப‌தை உச்ச நீதிமன்றமே ஒப்புக் கொண்டதாக அண்மையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பரப்புரையின்போது கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் நீதிமன்றம் கூறாததை கூறியது மூலம் ராகுல் காந்தி நீதிமன்ற அவமதிப்பு செய்து விட்டார் எனக் கூறி பாஜக எம்.பி. மீனாக்‌ஷி லேகி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ரஃபேல் வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ராகுல் காந்தி தவறான முறையில் சித்தரித்திருக்கிறார் என்றும், எனவே இது தொடர்பாக ராகுல் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்த‌னர். இதையடுத்து ராகுல் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. 

              

அதில், தேர்தல் பரப்புரையின் போது ரஃபேல் தொடர்பாக தெரிவித்த சில கருத்துகளை எதிர்க்கட்சியினர் தவறாக ‌சித்தரித்து விட்டனர் என்று தெரிவித்துள்ளார். எனினும் இதற்காக தாம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் ராகுல் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், பிரச்சார சூட்டின் நடுவே தாம் அவ்வாறு பேசிவிட்டதாகவும் அந்த பிரமாண பத்திரத்தில் ராகுல் கூறியுள்ளார்.
இவ்வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் இவ்விவகாரத்தால் ராகுல் காந்தியின் நம்பகத் தன்மை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close