[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேதார்நாத்தில் வழிபட்டதை நான் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்; எனக்கும் கேதார்நாத்துக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது - பிரதமர் மோடி

ராகுல் பேரணியில் காயமடைந்த பத்திரிகையாளர் பிரியங்காவுடன் சந்திப்பு

journalist-who-fell-from-truck-during-nomination-of-congress-president-rahul-gandhi-today-met-priyankagandhi-in-wayanad

வயநாட்டில் ராகுல் காந்தி வேட்பு மனுத் தாக்கலின் போது நடைபெற்ற பேரணியில் காயம் அடைந்த பத்திரிகையாளர், பிரியங்கா காந்தியை சந்தித்துள்ளார்.

கேரளாவிலுள்ள வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அதற்கான வேட்புமனுவை ஏப்ரல் 4ம் தேதி அவர் தாக்கல் செய்தார். அப்போது அவருடன் பிரியங்கா காந்தி, உம்மண் சாண்டி, ரமேஷ் சென்னிதாலா மற்றும் பலர் உடனிருந்தனர். அதன்பின்னர் ராகுல் காந்தி அங்கிருந்து பேரணியான வேனில் நின்றபடி சென்றார். 

                              

அந்தப் பேரணியின் போது பாதுகாப்பிற்காக போடப்பட்டிருந்த தடுப்பணைகள் உடைபட்டு விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று பத்திரிகையாளர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்த பத்திரிகையாளர்களுக்கு ராகுல் காந்தி உதவினார். அத்துடன் அவர்களை ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தார். 

இந்நிலையில், ராகுல் காந்திக்கு ஆதரவாக வயநாட்டில் பிரியங்கா காந்தி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தப் பிரச்சாரத்தின் இடையே, ராகுல் வேட்பு மனு காயமடைந்த பத்திரிகையாளர் ஒருவர் பிரியங்காவை சந்தித்துள்ளார். தமக்கு உதவியதற்காக அப்போது அவர் நன்றி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பு குறித்த வீடியோவை பத்திரிகையாளர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close