[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு
  • BREAKING-NEWS மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை
  • BREAKING-NEWS திருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

திமுகவிற்கு களங்கம் ஏற்படுத்தவே வேலூரில் தேர்தல் ரத்து - ஸ்டாலின் 

dmk-mk-stalin-condemned-that-cancellation-of-vellore-lok-sabha-polls-in-tamil-nadu

திமுகவிற்கு களங்கம் ஏற்படுத்தவே வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக பிரமுகர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் ஆன நிலையில், வேலூர் தொகுதி மக்களவை தேர்தல் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. பரப்புரை நிறைவடைந்த ஒரு மணி நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியானது. 

இந்நிலையில், வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின், வேண்டுமென்றே திட்டமிட்டு திமுகவின் மீது களங்கம் ஏற்படுத்த தேர்தல் ஆணையத்தை மோடி பயன்படுத்துகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், “தமிழிசை வீட்டில் கோடிகோடியாக பணம் வைத்துள்ளனர்; அங்கு ஏன் சோதனை செய்யவில்லை.

அதேபோல், துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் பணப்பட்டுவாடா செய்கிறார். தேர்தல் ஆணையத்தில் முறையாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. வரும் காலங்களில் தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தம் ஏற்படுத்த வேண்டும் என்பது என் கோரிக்கை” என்றும் அவர் கூறியுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close