[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

''நீதிமன்றத்தை அவமதிக்கிறார் ராகுல் காந்தி'' - நிர்மலா சீதாராமன்

rahul-gandhi-s-statement-on-sc-rafale-verdict-verge-on-contempt-of-court-nirmala-sitharaman

ரஃபேல் விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை ராகுல் காந்தி திரித்து கூறுவதாக நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ரஃபேல் விமானங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும் அதை விசாரிக்க வேண்டுமென்றும் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் கடந்த டிசம்பர் ‌மாதம், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதில் ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் எந்தத் தவறும், முறைகேடுகளும் நடக்கவில்லை என உச்ச‌நீதிமன்றம் தன் தீர்ப்பில் கூறியிருந்தது. 

இதனையடுத்து மத்திய அரசு ரஃபேல் வழக்கில் பல தகவல்களை மறைத்துள்ளதால், தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் எனக் கோரும் மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் விசாரணையை நடத்தியது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்கே கவுல், கேஎம் ஜோசப் ஆகியோர் ‌அமர்வு இதனை விசாரித்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் ரஃபேல் ஆவணங்கள் மீதான விசாரணை நடத்தப்படும் என்று 3 நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை வழங்கியுள்ளனர். 

             

இந்நிலையில், ரஃபேல் விவகாரத்தில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் ராகுல் காந்தி பேசி வருவதாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரஃபேல் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட சில ஆவணங்கள் மட்டும் திருடப்பட்டிருக்கின்றன. ரஃபேல் குறித்து வெளியான ஒரு சில ஆவணங்களும் சட்டவிரோதமான முறையில் வெளியாகின. ரஃபேல் ஆவணங்களை விசாரணைக்கு ஏற்போம்.

அனில் அம்பானிக்கு 30 ஆயிரம் கோடி ரூபாயை மோடி கொடுத்துவிட்டார். அவர் ஒரு திருடன் என நீதிமன்றமே கூறி விட்டதாக ‌ராகுல் கா‌ந்தி கூறி வருகிறார். இது போன்று நீதிமன்றம் எதுவுமே கூறவில்லை. சில ஆவ‌ணங்களை விசாரணைக்கு ஏற்பதாக மட்டுமே நீதிமன்றம் கூறியுள்ளது. இந்நிலையில் நீதிமன்றம் சொல்லாததையெல்லாம் சொன்னதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். இது மிகப்பெரிய நீதிமன்ற அவமதிப்பு. அரசியல் நாகரீகங்களை கடந்து சென்றுள்ளார் ராகுல் காந்தி” என்று தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close