[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

“துரைமுருகன் வீட்டில் சோதனை நடப்பது நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும்” -  எடப்பாடி பழனிசாமி

edappadi-pazhanisamy-explain-about-raid-of-the-duraimurugan-house

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் சோதனை நடைபெற்று வருவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி - காந்திநகரில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டுக்கு நேற்றிரவு 10.30 மணிக்கு வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினரும் சோதனை நடத்துவதற்காக வந்தனர். அப்போது அங்கிருந்த திமுக தொண்டர்கள், சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சுமார் 4 மணி நேரத்துக்குப் பிறகு, துரைமுருகனின் வீட்டில் சோதனை தொடங்கியது. அங்கிருந்த துரைமுருகனின் கார் உள்ளிட்ட வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. 

அதேபோல் வாணியம்பாடியில் உள்ள திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் தேவராஜின் வீட்டில் 2 மணி நேரம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு ஆவணங்களோ, பணமோ எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதேபோல, காட்பாடி கிருஸ்தியான்பேட்டையில் உள்ள துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரியிலும், பள்ளியிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 

துரைமுருகன் இல்லத்தில் இருந்து ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமானவரித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன, மேலும் துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரி, பண்ணை வீடுகளில் சோதனை தொடர்ந்து நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் சோதனை நடைபெற்று வருவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். திருவாரூர் பணங்குடியில் விவசாயிகளை சந்தித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதியதலைமுறைக்கு பேட்டியளித்தார். அப்போது, துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்தியது தேர்தல் ஆணையத்தின் வேலை எனவும் சோதனை நடந்தது குறித்து எனக்கு எதுவும் தெரியாது எனவும் தெரிவித்தார். மேலும் சோதனை நடந்தது குறித்து நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close