[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்புள்ளதா என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி
  • BREAKING-NEWS தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார் அமித் ஷா
  • BREAKING-NEWS கிராமப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு - மக்களவைத் தேர்தலில் 845 பேர் போட்டி

candidate-list-announced-for-2019-lok-sabha-election-in-tamil-nadu

தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 19-ஆம் தேதி முதல் தொடங்கி 26 ஆம் தேதி மாலை 3 மணியுடன் நடைபெற்றது. வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த நிலையில் 27ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. அதில் அதிமுக, திமுக கூட்டணி வேட்பாளர்கள், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள், அமமுக வேட்பாளர்கள், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என ஏராளமானோர் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது.

அதன்படி தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட ஆயிரத்து 587 வேட்புமனுக்களில், 932 மனுக்கள் ‌ஏற்கப்பட்டன. 655 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 518 வேட்புமனுக்‌கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததில், 305 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 

       

213 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் மாலை வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் 845 பேர் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக கரூரில் 42 பேரும், தென் சென்னையில் 40 பேரும் போட்டியிடுகின்றனர். மாநில கட்சிகள் சார்பில் 36 பேரும், இதர கட்சிகள் சார்பில் 46 பேரும், சுயேச்சைகள் 187 பேரும் போட்டியிடுகின்றனர். அதேபோல், 18 தொகுதி இடைத்தேர்தலில் 269 பேர் போட்டியிடுகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close