[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு
  • BREAKING-NEWS மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை
  • BREAKING-NEWS திருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

பொதுச் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் தினகரன் மனு

ttv-dhinakaran-asks-common-symbol-in-ec

மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் பொதுச் சின்னம் கேட்டு டிடிவி தினகரன் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அமமுகவிற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க கோரி டிடிவி தினகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், குக்கர் சின்னத்தை வழங்க முடியாது எனத் தெரிவித்துவிட்டது. எனினும் அமமுக சார்பில் நிறுத்தப்படும் அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒரே பொதுச் சின்னத்தை ஒதுக்க பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அவர்கள் சுயேட்சைகளாகவே கருதப்படுவார்கள் என்றும், எக்காரணம் கொண்டும் அமமுக அரசியல் கட்சியாக கருதப்படாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் பொதுச் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் டிடிவி தினகரன் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. குக்கர் சின்னம் கிடைக்காத நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுபடி பொதுச்சின்னம் வழங்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close