[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி

கட்சியாக பதிவு செய்தாலும் குக்கர் சின்னத்தை உடனடியாக தர முடியாது- தேர்தல் ஆணையம்

could-not-allot-cooker-symbol-immediately-election-commission-tells-in-sc

அமமுகவை இன்றே பதிவு செய்தாலும் குக்கர் அல்லது பொதுசின்னத்தை உடனே தர முடியாது என தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல், தமிழக இடைத்தேர்தலுக்கு குக்கர் சின்னத்தை பொது சின்னமாக ஒதுக்கக்கோரி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைகால மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இதுவரை பதிவு செய்யப்படாததால் சுயேச்சையாகவே கருதுவதாகவும் இதனால், பொதுச்சின்னம் கொடுக்க முடியாது என்றும், தனித்தனி சின்னம்தான் ஒதுக்க முடியும் என்றும் தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான பிரமாண பத்திரத்தையும் தேர்தல் அணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த நிலையில் அமமுகவுக்கு பொதுவான சின்னம் ஒதுக்குப்படுமா..? என்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று இறுதி விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது, அமமுகவுக்கு முதலில் குக்கர் சின்னத்தை கொடுத்தது யார்? என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தேர்தல் அதிகாரி குக்கர் சின்னத்தை அளித்தார் என டிடிவி தினகரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் தெரிவித்தார். இரட்டை இலை பற்றி மூலவழக்கு நிலுவையில் இருந்தபோது டெல்லி உயர்நீதிமன்றம் குக்கர் சின்னம் ஒதுக்கியது போன்று உச்சநீதிமன்றமும் இடைக்காலமாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என டிடிவி தினகரன் தரப்பில் வாதிடப்பட்டது.

பதிவு செய்யப்படாத கட்சிக்கு இடைக்காலமாக குக்கர் சின்னம் வழங்கியது பிரதிநிதித்துவ சட்டப்படி முரணானது; பதிவு செய்யப்படாத கட்சிக்கு எப்படி பொதுச்சின்னத்தை ஒதுக்க முடியும்? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, இன்றைக்கே அமமுகவை கட்சியாக பதிவு செய்கிறோம்; குக்கர் இல்லை என்றால் வேறு ஒரு பொதுச்சின்னம் தரவேண்டும் என டிடிவி தினகரன் தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து அமமுகவை இன்றே பதிவு செய்தாலும் குக்கர் அல்லது பொதுசின்னத்தை உடனே தர முடியாது என தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close