[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை அரசால் தேடப்பட்டு வந்த மதகுரு ஹஸிம் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார் - இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை - அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு
  • BREAKING-NEWS வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றது - கிழக்கு இந்திய பெருங்கடல்- தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிராக காவல்துறை அதிகாரிகள் 66 பேர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.79 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.34 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலையில் மாற்றமின்றி, டீசல் விலை 8 காசுகள் அதிகரித்து விற்பனை
  • BREAKING-NEWS சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை- பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளும் தீவிர சோதனை

“எந்தச் சின்னம் கொடுத்தாலும் ஓகேதான்” - டிடிவி தினகரன் பேட்டி

we-will-get-cooker-symbol-99-9-percentage-if-not-get-we-do-not-have-any-problem-with-any-symbol-ttv-dhinakaran

அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடப்போவதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். 

அமமுகவுக்கு நடக்கவுள்ள தேர்தல்களில் குக்கர் அல்லது ஏதேனும் ஒரு பொதுச் சின்னத்தை ஒதுக்குமாறு தினகரன் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமமுகவுக்கு பொதுச்சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்குவதில் என்ன பிரச்னை? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அமமுக கட்சி பதிவு செய்யப்படாததால் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் வாதிட்டது. உரிய ஆவணங்களை தேர்தல் ஆணையத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, நாளை காலை 10.30 மணி வழக்கினை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

                

இந்நிலையில், ‘குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுவோம்’ என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். மேலும், ‘நாளை காலை வழக்கு விசாரணைக்கு பிறகு அமமுக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்வார்கள்.

தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் இல்லை என்பதை உச்சநீதிமன்றமே இன்று சொல்லியுள்ளது. அதிமுகவை உரிமை கோரி வழக்கு நடைபெற்று வந்ததால்தான் கட்சியை பதிவு செய்யவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். தேர்தல் ஆணையம் எங்களுக்கு பொதுவான சின்னம் ஒதுக்காது என்பது எங்களுக்கு தெரியும்.

            

வழக்கினையும் எங்கள் நிலைமையினை கருத்தில் கொண்டு எங்களுக்கு பொதுச் சின்னம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. ஏனெனில் வழக்கு விசாரணையின் நடுவே தேர்தல் வந்தால் தங்களை அணுகுமாறு ஏற்கனவே நீதிமன்றம் தெரிவித்திருந்தது. நிச்சயம் எங்களுக்கு நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். 99.9 சதவிதம் குக்கர் சின்னம் கண்டிப்பாக கிடைக்கும்’ எனத் தெரிவித்தார். 

“குக்கர் சின்னம் உறுதியாக கிடைக்கும். 59 தொகுதிகளிலும் வேட்பாளர் நிறுத்தியிருப்பதால் குக்கர் சின்னம் கொடுப்பதில் சட்ட சிக்கல் இருக்காது” என்று உச்சநீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறினார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close