[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது
  • BREAKING-NEWS முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்
  • BREAKING-NEWS மதுரை மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் வேட்பு மனு தாக்கல் செய்தார்

“விளம்பர செலவு ரூ3044 கோடியை கல்விக்கு பயன்படுத்தியிருக்கலாம்” - மாயாவதி சாடல்

money-could-have-been-spent-on-education-health-mayawati-slams-pm-modi-for-allegedly-spending-rs-3044-cr-on-ads

 பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி பிரதமர் மோடியின் ஆட்சியில் விளம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

மக்களவை தேர்தலில் இன்னும் சில வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் மிகவும் மும்முரமாக வேலை செய்துவருகின்றன. நாட்டிலேயே அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலம் உத்தரபிரதேசம். அதனால் அங்கு தேர்தல் பணிகள் கலைகட்டியுள்ளன. அம்மாநிலத்தில், பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சி கூட்டணியை அமைத்துள்ளன. மேலும் ஆளும் கட்சியாக உள்ள பாஜகவும் அங்கு தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது.

                   

இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி பிரதமர் மோடி குறித்து ட்விட்டரில் ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார். அதில் அவர், “பிரதமர் மோடி விளம்பரங்களுக்கு செலவு செய்த ரூ3044 கோடியை கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு பயன்படுத்தியிருக்கலாம். பாஜகவிற்கு மக்கள் நலனைவிட விளம்பரங்களில் தான் அதிக நாட்டம் உள்ளது. அதனால் அவர்கள் விளம்பரத்திற்கு அதிக செலவுகள் செய்துள்ளனர்.

மேலும், “ பாஜக மற்றும் நரேந்திர மோடி தங்கள் ஆட்சியிலுள்ள பின்னடைவுகளை மறைக்க முற்படுகின்றனர். அத்துடன் மக்களை வறுமை மற்றும் வேலையில்லா தீண்டாட்டம் ஆகிய பிரச்னைகளில் இருந்து திசை திருப்புகின்றனர். இதனால் மக்கள் எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருக்கவேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

                 

மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலின் 7 கட்டங்களிலும் உத்தரபிரதேசம் மாநிலத்தில் தேர்தல் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close