[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்குடியில் அனுமதியின்றி தேர்தல் அலுவலகம் திறந்த புகாரில், சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி மீது காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ஓபிஎஸ் மகன் அதிமுகவிற்காக பல ஆண்டுகளாக உழைத்து வருகிறார்; அதனால் அவரை வேட்பாளராக அறிவித்ததில் எந்த தவறும் இல்லை - அமைச்சர் கே.சி.வீரமணி
  • BREAKING-NEWS நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்
  • BREAKING-NEWS நேர்காணலுக்கு கூட வராமல், தான் தேர்தலில் போட்டியிடுவதாக சி.கே.குமரவேல் அறிவித்தது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல் - ஜனநாயக முறைப்படி நடைபெற்ற வேட்பாளர் தேர்வுமுறைக்கு எதிராக செயல்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறது
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உட்பட 10பேரை மார்ச் 27ல் மீண்டும் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உதகை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.52 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.87 காசுகளாகவும் விலை நிர்ணயம்

மக்களவை தேர்தல் - திமுக கூட்டணிக்கு வேல்முருகன் ஆதரவு

velmurugan-support-to-dmk-in-lok-sabha-election

மக்களவை தேர்தலில் வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக்கட்சி திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு கூட்டணி அமைக்கும் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக இயங்கி வருகின்றன. தமிழகத்தில், திமுக தனது கூட்டணியை இறுதி செய்துவிட்டது. கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகள் போக திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதேசமயம் அதிமுகவும் கூட்டணியை முடித்துவிட்டது. 

இதனிடையே டிடிவி தினகரனின் அமமுகவுடன் வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக்கட்சி கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. இதைத்தொடர்ந்து இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன், மக்களவை தேர்தலில் தன்னை போட்டியிடுமாறு ஏராளமானோர் வற்புறுத்துவதாகவும், தனது மருத்துவர்கள் சான்றிதழ் அளித்து அனுமதித்தால் தான் தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். எனினும் மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை எனவும் அவர் கூறினார்.  

இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வேல்முருகன் ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை எனத் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close