[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

“வாரணாசியில் மோடி..லக்னோவில் நான் மீண்டும் போட்டி” ராஜ்நாத் சிங் உறுதி

rajnath-singh-says-pm-modi-will-again-contest-from-varanasi-he-will-stick-with-lucknow

வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியும், லக்னோவில் தானும் மீண்டும் போட்டியிடவுள்ளதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் இன்னும் சில வாரங்களில் தொடங்கவுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடுகள் ஆகியவற்றில் தீவிரமாக இறங்கியுள்ளன. அத்துடன் ஒரு சில கட்சிகள் தங்களின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியும் அதனுடைய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

                        

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “பிரதமர் மோடி கடந்த முறை போட்டியிட்ட வாரணாசி தொகுதியில்தான் இம்முறையும் போட்டியிடுவார். அதேபோல நானும் அதே லக்னோ தொகுதியில் தான் போட்டியிடவுள்ளேன். ஏனென்றால் எனக்கும் லக்னோ தொகுதி மக்களும் இடையே உள்ள அன்பு வலுப் பெற்றுள்ளது. அதனால் நான் இதே தொகுதியில் இம்முறையும் நிற்பேன்” எனக் கூறியுள்ளார்.

                

உத்தரபிரதேசத்தில் ரேபராலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி போட்டியிடுகிறார். அத்துடன் அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடவுள்ளார். நாட்டின் முன்னனி அரசியல் தலைவர்கள் போட்டியிட உள்ளதால் உத்தரபிரதேசம் மக்களவை தேர்தல் ஏதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close