[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவின் முதல் லோக்பால் அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பினாக்கி சந்திரகோஷ் நியமனம்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல், இடைத்தேர்தலுக்கான பரப்புரையை நாளை திருவாரூரில் தொடங்கும் நிலையில், திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள இல்லத்தில் கீழ்வேளூர், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல், 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்துள்ளோம் மக்களவை தேர்தலில் 1 தொகுதி, இடைத்தேர்தலில் 3 தொகுதிகளில் இந்திய குடியரசுக் கட்சி போட்டி - சே.கு. தமிழரசன் (இந்திய குடியரசுக் கட்சி)
  • BREAKING-NEWS பாதுகாப்பு படைகளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் - கட்சித்தலைவர்கள், வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தும்படி அரசியல் கட்சிகளுக்கு மீண்டும் தேர்தல் ஆணையம் கடிதம்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை நாளை மதியம் 2 மணிக்கு வெளியிடுகிறார் கமல்ஹாசன்
  • BREAKING-NEWS பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரின் காவலை ஏப்ரல் 2 வரை நீட்டித்தது பொள்ளாச்சி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நீதிபதி கண்முன்னே மனைவியை கத்தியால் குத்திய கணவன்! மருத்துவமனையில் மனைவிக்கு சிகிச்சை!

தேர்தல் நேரத்தில் போராட்டமா? - பொள்ளாச்சி விவகாரத்தில் கனிமொழிக்கு அனுமதி மறுப்பு

no-permission-for-kanimozhi-protest-in-pollatchi

பொள்ளாச்சியில் திமுக எம்.பி கனிமொழி தலைமையில் நடைபெற இருந்த போராட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் அனுமதி மறுத்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளனர். மேலும் அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிக்கையில் இந்த விவகாரத்தில் திமுக  சட்டரீதியாகவும் மக்கள் மன்றத்திலும் தனது போராட்டத்தை மேற்கொள்ளும் என தெரிவித்திருந்தார். அதன்படி இன்று திமுக எம்.பி கனிமொழி தலைமையில் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து போராட்டம் நடத்தப்பட இருந்தது.

மேலும் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறை சம்பவம் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதையே உணர்த்துகிறது. இந்த கூட்டத்தையும், இதில் சம்பந்தப்பட்டவர்களையும், அரசும் அமைச்சர்களும் காப்பாற்ற முனையாமல், சிறப்பு நீதிமன்றத்தை நிறுவி, உடனடியாக குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், பொள்ளாச்சியில் திமுக எம்.பி கனிமொழி தலைமையில் நடைபெற இருந்த போராட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் அனுமதி மறுத்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருப்பதால் அனுமதிக்க இயலாது என வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close