[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
  • BREAKING-NEWS போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS தெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

மு.க.ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலை‌வர் அந்தஸ்து: சபாநாயகர் தனபால் அறிவிப்பு

mk-stalin-is-leader-of-the-opposition-in-tamil-nadu-assembly

தமிழக சட்டப்பே‌ரவையின் எதிர்க்கட்சித் தலை‌வராக திமுக பொருளாளர்‌ மு.க.ஸ்டாலின் அங்கீகரிக்கப்படுவதாக சாபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இதனை தெரிவித்துள்ளார். 89 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்ற நிலையில் அக்கட்சியின் சட்டப்பேரவைக்குழு தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்தெடுக்கப்பட்டார். தற்போது ஸ்டாலினை எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 3ம் தேதி சட்டப்பேரவை தலைவர், துணை தலைவர் தேர்தல் நடைபெற்றது. அப்போது சட்டமன்ற திமுக துணை தலைவர் துரைமுருகன் பேசுகையில், மு.க.ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்து தரப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார் அப்போது பதில்அளித்த தற்காலிக சபாநாயகர் செம்மலை, தேர்ந்தெடுக்கப்படும் சபாநாயகர்தான் அதற்கான உத்தரவை பிறப்பிப்பார் என்றார். இந்நிலையில் திமுக சட்டமன்ற கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக சபாநாயகர் அங்கீகரித்துள்ளதாக, சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் நேற்று பிறப்பித்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close