[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது? - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS திருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்
  • BREAKING-NEWS தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்

“ரஜினி ஆதரவு கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது”- கமல்ஹாசன்

kamal-hassan-about-rajinikanth-support

ரஜினியிடம் ஆதரவு கேட்பதை விட அவரே ஆதரவு கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மும்முரமாக தயராகி வருகின்றன. அதேசமயம் புதிதாக தேர்தலை சந்திக்க உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி இதுவரை எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை. இதனிடையே மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 'பேட்டரி டார்ச்' சின்னத்தை தேர்தல் ஆணையம் இன்று காலை ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில் தேர்தலுக்காக ரஜினியிடம் ஆதரவு கேட்பதை விட அவரே ஆதரவு கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ எங்களுடைய கூட்டணி மக்கள் கூட்டணி; நிச்சயம் வெல்லும் கூட்டணி. மக்களுக்கான தேர்தல் அறிக்கை தயாராகிக் கொண்டிருக்கிறது. விரைவில் வெளியிடப்படும். ரஜினியிடம் ஆதரவு கேட்பதை விட அவரே ஆதரவு கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது” என தெரிவித்தார்.

இதனிடையே வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் மற்றும் 21 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என தெரிவித்துள்ள ரஜினி, சட்டமன்றத் தேர்தலே தம் இலக்கு என கூறியுள்ளார். அத்துடன் தண்ணீர் பிரச்னையை தீர்க்கும் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் ரஜினி கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close