[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS குழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS 2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS தமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி

கனிமொழியிடம் ஸ்டாலின் நேர்காணல்

mk-stalin-interview-with-kanimozhi

தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்த கனிமொழியிடம் நேர்காணல் நடைபெற்று வருகிறது.

மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில், கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. எனவே திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. திமுக சார்பில் 21 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேற்று நேர்காணல் நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடைபெற்று வருகிறது. மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழி விருப்பம் தெரிவித்திருந்தார். அவரிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் நேர்காணல் செய்தனர்.

இதனிடையே வேட்பாளர்கள் தங்களுக்கான ஆதரவாளர்களையோ, பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக்கூடாது என்றும், அவர்களை எல்லாம் நேர்காணலின்போது அனுமதிக்க முடியாது என்றும் திமுக சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close