[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

மோடி பொதுக்கூட்டத்தில் இடம்பெற்ற விஜயகாந்த் புகைப்படம் ! கூட்டணி உறுதியா ?

vijayakanth-in-admk-alliance-meeting

அதிமுகவுடன் கூட்டணி என தேமுதிக இன்னும் அறிவிக்காத சூழலில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடையில் விஜயகாந்த் படம் வைக்கப்பட்டுள்ளது.

அதிமுக - பாஜக கூட்டணியில் தேமுதிகவை கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வந்தது. நேற்றைய தினமே தேமுதிக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வரை தேமுதிக தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. எனினும் தேமுதிக தங்கள் கூட்டணியில் இணையும் என பாஜக மற்றும் அதிமுகவை சேர்ந்த தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இந்த சூழலில் இன்று சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் அதிமுக- பாஜக கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி இதில் கலந்து கொண்டு பரப்புரையை தொடங்குகிறார். இந்நிலையில் இந்த பொதுக்கூட்ட மேடையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் படம் வைக்கப்பட்டுள்ளது. அதுதவிர தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் படமும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவது உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக இந்த பொதுக்கூட்டத்துக்காக அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரங்களில், பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களின் படங்களும் இடம்பெற்றிருந்தன. ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் படம் இடம்பெறவில்லை. இந்நிலையில் தற்போது பொதுக்கூட்டத்தில் விஜயகாந்தின் படம் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close