[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்

புதுச்சேரி தேர்தல் அதிகாரி இடமாற்றம் வழக்கு: உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

puducherry-ec-case-hc-ordered-to-issue-a-proper-order-within-a-week-by-the-chief-electoral-officer

தலைமைத் தேர்தல் அதிகாரி இடமாற்றம் செய்யக் கோரிய வழக்கில் ஒரு வாரத்தில் தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடபட்டுள்ளது.

புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரி கந்தவேலுவை இடமாற்றம் செய்யக் கோரி, அம்மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராஜாங்கம் என்பவர் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, 2015 முதல் புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரியாக உள்ள கந்தவேலு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளதால், அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என, மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், இது சம்பந்தமாக தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

Image result for election commission

தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் ஆணைய விதிகளின்படி, தலைமை தேர்தல் அதிகாரிக்கு பதவிக்காலம் ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை எனவும், சில மாநிலங்களில் ஏழு ஆண்டுகள் வரை தலைமை தேர்தல் அதிகாரிகள் பணியாற்றியுள்ளதாகவும் விளக்கமளித்தார். மேலும், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு மட்டும் தான் எனவும் தெரிவித்தார்.இந்த வாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், மனுதாரரின் மனுவை பரிசீலித்து ஒரு வாரத்தில் தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close