[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.59 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.59 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS காரைக்குடியில் அனுமதியின்றி தேர்தல் அலுவலகம் திறந்த புகாரில், சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி மீது காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ஓபிஎஸ் மகன் அதிமுகவிற்காக பல ஆண்டுகளாக உழைத்து வருகிறார்; அதனால் அவரை வேட்பாளராக அறிவித்ததில் எந்த தவறும் இல்லை - அமைச்சர் கே.சி.வீரமணி
  • BREAKING-NEWS நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்
  • BREAKING-NEWS நேர்காணலுக்கு கூட வராமல், தான் தேர்தலில் போட்டியிடுவதாக சி.கே.குமரவேல் அறிவித்தது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல் - ஜனநாயக முறைப்படி நடைபெற்ற வேட்பாளர் தேர்வுமுறைக்கு எதிராக செயல்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறது
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உட்பட 10பேரை மார்ச் 27ல் மீண்டும் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உதகை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.52 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.87 காசுகளாகவும் விலை நிர்ணயம்

இனி வரும் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு இல்லை- டிடிவி தினகரன்

ttv-dhinakaran-interview-at-madurai

இனி கூட்டணிக்கு வரும் கட்சிகளின் ஆதரவை ஏற்றுக் கொள்வோமே தவிர, அவர்களுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யமாட்டோம் என அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலுக்கு கூட்டணி அமைக்கும் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “நிறைய கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் ஜெயலலிதாவிற்கு எதிரானவர்களுடன் கூட்டணி வைக்க நாங்கள் விரும்பவில்லை. மக்களும் , தொண்டர்களும் எங்களுடன் உள்ளனர். நாங்கள் 40 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளோம். கூட்டணிக்கு 2 போக 38 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். இனி கூட்டணிக்கு வரும் கட்சிகளின் ஆதரவை ஏற்றுக்கொள்வோமே தவிர, அவர்களுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யமாட்டோம்.

தமிழிசை சவுந்தரராஜன் பற்றி தவறாக பேசியதால் நாஞ்சில் சம்பத் மீது வழக்கு போட்டார்கள். குண்டர் சட்டத்தில் கைது செய்துவிடுவார்கள் என்பதால் என்னிடமிருந்து பயந்து ஓடினார். அதேபோல் தான் செந்தில்பாலாஜி திமுக சென்றார். என்னிடம் இருந்தபோது அவர் எப்படி மரியாதையாக இருந்தார். ஆனால் அவரின் நிலைமையை பார்த்தால் பாவமாக உள்ளது. கிணத்துகடவு தாமோதரன் எனது கட்சிக்கு வந்து மாவட்ட செயலாளர் பதவி கேட்டார். என்னால் தர முடியவில்லை, அதனால் திமுகவிடம் சென்றுவிட்டார். துணை முதலமைச்சர் ஓபிஎஸ், அதிமுக பொது செயலாளரை மாற்றி மோடியை பொதுச் செயலாளராக ஆக்கியுள்ளார்.

அதிமுகவின் தற்போதைய நிலை வடிகட்டிய சந்தர்பவாதம். ஜெயலலிதாவிற்கு எதிராக பேசியவர்களுடன் கூட்டணி வைத்த ஈபிஎஸ் அணியினர், அம்மா படத்தை வைக்க கூடாது” என தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close