[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் தர முடியாது என உச்சநீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்
  • BREAKING-NEWS நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவிக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம்
  • BREAKING-NEWS பயங்கரவாதிகளை வேரோடு, கூண்டோடு அழிக்கக்கூடிய சக்தி நரேந்திர மோடிக்குத்தான் இருக்கிறது - சென்னை ராயபுரத்தில் முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS வேட்பு மனுவில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் கையெழுத்திடுவதற்கு எதிரான வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவியை கட்சியை விட்டு நீக்கிய மு.க.ஸ்டாலினுக்கு நயன்தாரா நன்றி
  • BREAKING-NEWS அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுவோம் - டிடிவி தினகரன்

விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்தார் ஓபிஎஸ் - உறுதியானது கூட்டணி?

aiadmk-organiser-o-panneerselvam-meet-dmdk-leader-vijayakanth-in-his-saligramam-home

தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்துள்ளார்.  

நாடாளுமன்றத் தேர்தல் வருவதையொட்டி தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் அரசியல் களம் சூடிபிடித்துள்ளது. தமிழகத்தில் கூட்டணி முடிவுகள் பரபரப்புடன் வெளியாகிக்கொண்டிருக்கிறது. பிரதான கட்சிகளான திமுக, அதிமுக தங்களது கூட்டணியை கிட்டதட்ட உறுதியாக்கிவிட்டன. ஆனால், தேமுதிக இன்னும் தனது நிலைப்பாட்டை வெளியிடா‌மல் இருப்பதுதான், திமுக, அதிமுக கூட்டணி ஒரு முடிவுக்கு வராமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

          

முதலில் அதிமுக-பாஜக கூட்டணியில் தேமுதிக இணையும் என்று பேசப்பட்டது. பாஜக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது வந்தது. ஆனால், தேமுதிக தலைவர் விஜயகாந்தை, திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்த பிறகே சற்றே களம் மாறியது. திமுகவுடனும் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக பிரேமலதா தெரிவித்தது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், திமுக உடனான பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டு விட்டதாக சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. 

          

அதனால், அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவதற்கான பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. அதிமுக தலைவர்கள் பலரும் தேமுதிக உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாக தெரிவித்து வந்தனர். மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக வரும் 6-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி, கூட்டணிக்கட்சி தலைவர்களுடன் ஒரே மேடையில் பங்கேற்று பேசுவார் என மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்து இருந்தார். அதனால், நாளைக்குள் தேமுதிக உடனான பேச்சுவார்த்தை இறுதி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. 

      

இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தை சென்னை சாலிகிராமத்தில் அவரது இல்லத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது அமைச்சர் ஜெயக்குமாருடன் இருந்தார். இந்தச் சந்திப்பின் மூலம் கூட்டணி கிட்டதட்ட உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

தேமுதிகவுடன் பாஜக தரப்பினரே நேரடியாக சென்று இதுவரை பேசி வந்தனர். அதிமுக தரப்பில் இதுவரை யாரும் தேமுதிகவினரை சந்திக்கவில்லை. இந்த நிலையில், தற்போது முதன்முறையாக அதிமுக ஒருங்கிணைப்பாளராக உள்ள பன்னீர் செல்வம் விஜயகாந்தை சந்தித்துவுள்ளார். அதேபோல், தேமுதிக உயர்நிலைக்குழுக் கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close