[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2ம் கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறும் தமிழகம். புதுச்சேரி உள்ளிட்ட 97 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் நிறைவு
  • BREAKING-NEWS டிடிவி தரப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவை மற்ற வழக்குகளுக்கு முன்மாதிரியாக கருதக்கூடாது என்ற ஆணையத்தின் கோரிக்கை நிராகரிப்பு
  • BREAKING-NEWS டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS பொள்ளாச்சி கொடூரம்: புகார் அளித்த பெண்ணின் அண்ணனை தாக்கிய வழக்கில் 28ம் தேதி விசாரணைக்கு ஆஜராக பார் நாகராஜனுக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.67 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்

“250 பேர் இறந்தார்கள் என அமித்ஷாவுக்கு எப்படி தெரியும்?” - கபில் சிபல் கேள்வி

don-t-play-politics-with-terror-keeping-lok-sabha-elections-in-mind-kapil-sibal-to-pm-narendra-modi-amit-shah

தாக்குதலில் யாரும் இறக்கவில்லை என்ற தகவல்களுக்கு பிரதமர் மோடி விளக்கம் தர வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.

இந்திய விமானப் படை விமானங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் சுமார் 300 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், இந்தியா நடத்திய தாக்குதலில் இறந்தவர்கள் எண்ணிக்கை குறித்து அரசு எதுவும் கூறவில்லை எனவும் சமூக வலைத்தளங்களில்தான் 300 பேர், 350 பேர் எனத் தகவல்கள் பரவுவதாகவும் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.அலுவாலியா கூறியிருந்தார். 

          

இந்நிலையில், பாகிஸ்தானில் இந்திய விமானப் படை விமானங்கள் நடத்திய தாக்குதலில் 250க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார். 

இதற்கிடையே, இந்தியா நடத்திய தாக்குதலில் யாருமே இறந்திருக்க வாய்ப்பில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் கூறுவதாகவும் இதற்கு பிரதமர் பதில் கூற வேண்டும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் வலியுறுத்தியுள்ளார். வெளிநாட்டு ஊடகங்கள் தம்மைப் புகழ்ந்தால் பிரதமர் பெருமிதப்படுவதாகவும், ஆனால் அதே ஊடகங்கள் விமர்சித்தால் பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ளனர் என வசைபாடுவதாவும் ‌கபில் சிபல் தெரிவித்தார்.

           

இதுதொடர்பாக ஏஎன்ஐ-க்கு கபில் சிபல் அளித்த பேட்டியில், “உங்கள் அமைச்சர்கள் 300 பேர் கொல்லப்பட்டார்கள், 400 பேர் கொல்லப்பட்டார்கள் என்று கூறி வருகிறார்கள். அவர்களுக்கு எங்கிருந்து தகவல் கிடைக்கிறது. மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு இத்தனை பேர், அத்தனை பேர் என்று கூறிவருகிறார்கள். அமித்ஷாவுக்கு யார் தகவல் கொடுத்தது. 250 பேர் கொல்லப்பட்டார்கள் என்று பாதுகாப்புத்துறையினர் அவரிடம் கூறினார்களா? மத்திய அரசு அவரிடம் கூறியதா?. 

அமித்ஷா ஒரு கட்சியின் தலைவர் மட்டுமே. மத்திய அரசும், பாதுகாப்பு துறையும் இந்தத் தகவலை அவரிடம் பகிர்ந்து கொள்ளும் போது, நாட்டின் எதிர்க்கட்சிகளான எங்களிடம் ஏன் பகிர்ந்து கொள்ளக் கூடாது? பயங்கரவாதத்தில் அரசியல் செய்ய வேண்டாம். நீங்களும் பிரதமரும் இதேயேதான் செய்கிறீர்கள். தேர்தலுக்காகத்தான் இதனை செய்கிறீர்கள் என்று எங்களுக்கு தெரியும்” என்று கூறியுள்ளார்.  

       

மேலும், “பால்கோட் தாக்குதலில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று சர்வதேச ஊடகங்கள் எப்படி கூறுகின்றன?. அப்படியென்றால் சர்வதேச ஊடகங்களும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுகின்றனவா? சர்வதேச ஊடகங்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் செயல்படுவதாக பிரதமர் மோடி கூறுவாரா?” என்றும் கபில் சிபில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close