[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்குடியில் அனுமதியின்றி தேர்தல் அலுவலகம் திறந்த புகாரில், சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி மீது காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ஓபிஎஸ் மகன் அதிமுகவிற்காக பல ஆண்டுகளாக உழைத்து வருகிறார்; அதனால் அவரை வேட்பாளராக அறிவித்ததில் எந்த தவறும் இல்லை - அமைச்சர் கே.சி.வீரமணி
  • BREAKING-NEWS நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்
  • BREAKING-NEWS நேர்காணலுக்கு கூட வராமல், தான் தேர்தலில் போட்டியிடுவதாக சி.கே.குமரவேல் அறிவித்தது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல் - ஜனநாயக முறைப்படி நடைபெற்ற வேட்பாளர் தேர்வுமுறைக்கு எதிராக செயல்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறது
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உட்பட 10பேரை மார்ச் 27ல் மீண்டும் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உதகை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.52 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.87 காசுகளாகவும் விலை நிர்ணயம்

எந்த சின்னத்தில் போட்டி ? விசிகவில் இருவேறு கருத்து - திருமாவளவன் பேட்டி

thirumavalavan-about-party-symbol-to-contest-election

மக்களவை தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியா அல்லது உதயசூரியன் சின்னத்தில் போட்டியா என்பது பற்றி நாளை ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் தொடர்பாக திமுக கூட்டணியில் ஏற்கெனவே காங்கிரஸ் கட்சிக்கு பத்து இடங்களும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா ஒரு இடமும் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இன்று இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதனிடையே விசிக, தனிச் சின்னத்தில் போட்டியிடுமா அல்லது திமுகவின் உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, இதுகுறித்து நாளை ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக பேசிய திருமாவளவன், “ திமுக கூட்டணியில் விசிகவுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தற்போது எண்ணிக்கை மட்டுமே முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பதை அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்வோம். 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்தே விசிக தனிச் சின்னத்தில் தான் போட்டியிட்டு வருகிறது. ஆனால் இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த 40 தொகுதிளிலும் வெற்றி தேவைப்படுகிறது. எனவே விசிகவின் முன்னணி பொறுப்பாளர்களிடையே விசிக தனிச் சின்னத்தில் போட்டியிடலாமா அல்லது உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடலாமா என்ற இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. எனவே அதுதொடர்பாக நாளை கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். அதேசமயம் திமுகவிலிருந்து உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்ற எந்த அழுத்தமும் வரவில்லை.

விசிக இடம்பெறும் கூட்டணி மக்களின் நன்மதிப்பை பெற்ற கூட்டணி என்பது மக்களுக்கு தெரியும். அத்துடன் இணக்கமான முறையில் கொள்கை சார்ந்த கூட்டணியாக, இக்கூட்டணி அமைந்துள்ளது. ஆனால் கூட்டணி அமைத்த பின்பும் கூட அதிமுக- பாஜக இடையே கருத்து மோதல் உள்ளது. கூட்டணி ஒப்பந்தம் முடிவாவதற்கு முந்தைய நாள் கூட பாமக- அதிமுக இடையே மோதல் இருந்தது” என தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close