[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள்..!

2-seats-for-vck-and-dmk-alliance

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மக்களவைத் தேர்தல் தொடர்பாக திமுக கூட்டணியில் ஏற்கெனவே காங்கிரஸ் கட்சிக்கு பத்து இடங்களும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா ஒரு இடமும் ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுடன், மு.கஸ்டாலின் நடத்திய 2-ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஏற்கெனவே மக்களவைத் தேர்தலில் தாம் திமுக கூட்டணியில் இருப்பதாகவும், சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிடுவேன் என்றும் திருமாவளவன் தெரிவித்திருந்தார். எனவே தற்போது ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு தொகுதிகளில் ஒரு தொகுதி நிச்சயம் சிதம்பரம் தொகுதியாகத் தான் இருக்கும். மற்றொரு தொகுதியாக விழுப்புரம் அல்லது திருவள்ளூர் தொகுதி ஒதுக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே நாளை மாலைக்குள் அனைத்துக் கூட்டணி கட்சிகளுடனும் திமுக தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துவிடும் என தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close