[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் தான் போட்டியில்லை என மாயாவதி அறிவிப்பு
  • BREAKING-NEWS அரசியலுக்கு வாரிசுகள் வரக்கூடாது என்பது எந்த சட்டத்திலும் இல்லை- மதுரையில் ஒபிஎஸ் பேட்டி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.59 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.59 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் பரப்புரையை திருவாரூரில் இருந்து தொடங்கினார் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS இந்தியாவின் முதல் லோக்பால் அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பினாக்கி சந்திரகோஷ் நியமனம்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல், இடைத்தேர்தலுக்கான பரப்புரையை நாளை திருவாரூரில் தொடங்கும் நிலையில், திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள இல்லத்தில் கீழ்வேளூர், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல், 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்துள்ளோம் மக்களவை தேர்தலில் 1 தொகுதி, இடைத்தேர்தலில் 3 தொகுதிகளில் இந்திய குடியரசுக் கட்சி போட்டி - சே.கு. தமிழரசன் (இந்திய குடியரசுக் கட்சி)

“கூட்டணிக்கட்சியினருடன் ஒரே மேடையில் பேசுவார் மோடி” - தமிழிசை

pm-modi-coming-to-tamil-nadu-will-speak-with-alliance-party-leaders-bjp-leader-tamilisai

மக்களவை தேர்தல் பரப்புரைக்காக வரும் 6-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி, கூட்டணிக்கட்சி தலைவர்களுடன் ஒரே மேடையில் பங்கேற்று பேசுவார் என மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள கிளபாக்கத்தில் பொதுக்கூட்டத்திற்கான முன்னேற்பாடுகளை அவர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை, பிரதமர் மோடி பங்கேற்கும் இக்கூட்டம், தமிழகத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார். 

தேமுதிக உடனான பேச்சுவார்த்தை ஓரிரு நாளில் இறுதி வடிவம் பெற்றுவிடும் என கூறிய அவர், இப்பொதுக்கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளதாகவும் கூறினார்.

அதிமுக கூட்டணியில் கிட்டதட்ட அவர்கள் எதிர்பார்த்த அனைத்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்து ஒப்பந்தம் ஆகிவிட்டார். தேமுதிக உடனான பேச்சுவார்த்தை மட்டும் தொடர்ந்து இழுபறியில் உள்ளது. 6ம் தேதி தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். இந்தக் கூட்டத்தில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் இடம்பெறுவார்கள் என்று அதிமுக தலைவர்களும் கூறி வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close