[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிகவின் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்கள் கணிப்பைத்தான் பார்க்க வேண்டும்; கருத்துக்கணிப்பை முழுமையாக ஏற்க முடியாது - தம்பிதுரை
  • BREAKING-NEWS லண்டன் நீதிமன்றத்தில் வைர வியாபாரி நிரவ் மோடி தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி; இந்திய மதிப்பில் ரூ.4.50 கோடி பிணைத்தொகை செலுத்த தயாராக இருப்பதாக நிரவ் மோடி தரப்பு வாதம்
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்பது குறித்து 24 ஆம் தேதி அறிவிக்கப்படும் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் தான் போட்டியில்லை என மாயாவதி அறிவிப்பு
  • BREAKING-NEWS அரசியலுக்கு வாரிசுகள் வரக்கூடாது என்பது எந்த சட்டத்திலும் இல்லை- மதுரையில் ஒபிஎஸ் பேட்டி

தோழமை கட்சிகளுக்கு திமுக அழைப்பு...தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை?

dmk-talks-with-alliance-parties-today

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து இன்று பேச்சுவார்த்தை நடத்த, தோழமை கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இவர்களிடம் தொகுதி பங்கீடு குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு விசிகவுக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதிகள் இறுதி செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொகுதி பங்கீட்டில் மதிமுகவுக்கு மூன்று இடங்களும், விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு இடங்களும் வழங்க உள்ளதாக தெரிகிறது. முதற்கட்ட பேச்சுவார்த்தையின் போதே தோழமைக் கட்சிகள் தாங்கள் போடியிட விரும்பும் தொகுதிகள் குறித்த விவரங்களை அளித்ததாக தெரிகிறது. ‌டெல்லியில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் அக்கட்சியினர் பங்கேற்றுள்ளதால் நாளை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரிகிறது. தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டால் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி அறிவிக்கப்படும்.

திமுக கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு பத்து இடங்களும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன.-

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close