[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது? - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS திருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்
  • BREAKING-NEWS தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்

அதிமுக கூட்டணியில் தேமுதிக ?: இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு

admk-dmdk-alliance-confirmed

மக்களவை தேர்தலையொட்டி அதிமுக - தேமுதிக கூட்டணி உறுதியாகியுள்ளதாகவும், இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் இழு‌‌பறி நீடித்துவந்த நிலையில் தற்போது பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேமுதிகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாகவும், விஜயகாந்த் நல்ல முடிவை அறிவிப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். அதேபோல அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றால் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவோம் என பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

இதனிடையே , தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், கூட்டணி தொடர்பான குழுவுடன் ஆலோசனை நடத்தினார். இதில் அவரது மனைவியும், கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த், துணைச் செயலாளர் சுதிஷ் மற்றும் பார்த்தசாரதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, அதிமுகவுடன் கூட்டணி வைப்பது என முடிவு செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.

மேலும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பூர், மதுரை, நாமக்கல் உள்ளிட்ட 5 மக்களவை தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியைக் கேட்பது என முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கூட்டணி தொடர்பான முடிவுகள் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உடல்நலக்குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை முடித்து வீட்டில் ஓய்வெடுத்து வந்த விஜயகாந்த், நெடுநாட்களுக்கு பின்னர் கட்சி அலுவலகத்திற்கு வந்து நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close