[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2ம் கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறும் தமிழகம். புதுச்சேரி உள்ளிட்ட 97 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் நிறைவு
  • BREAKING-NEWS டிடிவி தரப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவை மற்ற வழக்குகளுக்கு முன்மாதிரியாக கருதக்கூடாது என்ற ஆணையத்தின் கோரிக்கை நிராகரிப்பு
  • BREAKING-NEWS டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS பொள்ளாச்சி கொடூரம்: புகார் அளித்த பெண்ணின் அண்ணனை தாக்கிய வழக்கில் 28ம் தேதி விசாரணைக்கு ஆஜராக பார் நாகராஜனுக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.67 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்

பாமகவை எதிர்த்தே முன்னேறும் தேமுதிக !

pmk-is-opppsitipon-for-dmdk

நடைபெற்று வரும் தமிழக அரசியல் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் அதிக அடிபடும் கட்சி தேசிய முற்போக்கு திராவிட கழகம். அதற்கு காரணம், ஆளும் கட்சியான அஇஅதிமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் தங்களின் கவனத்தை தேமுதிக மீது குவித்திருப்பதுதான். கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்ற பேச்சு அடிப்பட்டு வந்த சமயத்திலும் இதே கட்சி பெரிய பேசு பொருளாக இருந்தது.

Related image

‘யாருடனும் கூட்டணி இல்லை. மக்களுடனும் தெய்வத்துடனும்தான் கூட்டணி’ எனப் பேசி வந்த விஜயகாந்த் கடைசி கட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுடன் கூட்டு வைத்தார். இந்தக் கூட்டணியை அவர் அதிகம் விரும்பி செய்தார் எனக் கூற முடியாது. இந்த இரு கட்சிகளுக்குள்ளும் வெளியில் தெரியாத அளவுக்கு சில பூசல்கள் கூட்டணி அமைந்த பின்பும் நிலவவே செய்தன. 

Image result for vijayakanth and jayalalithaகூட்டணி இறுதியான பிறகு ஜெயலலிதா தலைமையில் கோவையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக பண்ருட்டி ராமச்சந்திரன் பங்கேற்றார். அப்போது விஜயகாந்தின் புறக்கணிப்பு பெரிய பூசலாக உருவெடுத்தது. “கூட்டணி தலைவர்கள் ஒரே மேடையில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. விஜயகாந்திற்கு ஏற்கெனவே தேர்தல் பிரச்சார பயணம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப அவர் தனது பிரச்சாரத்தை நடத்தி வருகிறார்” எனத் தேமுதிக சார்பில் ஒரு விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும் இந்த உரசலை ஊடகங்கள் எடுத்து பேசின. முக்கியமாக பிரதான எதிர்க்கட்சிகள் இந்தப் புறக்கணிப்பை எடுத்து காட்டின. 

Image result for Vijayakanth in Assembly

இந்த இருகட்சிகளின் கூட்டணி அதிமுகவிற்கு பயன்பட்டதை விட தேமுதிகவிற்கு அதிகம் பயனளித்தது என்றே சொல்ல வேண்டும். காரணம், 2006 சட்டமன்றத் தேர்தலில் தனித்து 234 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றிக் கனியை பறித்தது. ‘விருத்தாசலத்தில் விருதகிரி’ என்னும் அடையாளத்துடன் விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றார். ஆனால் இந்த வெற்றி, எளிதாக கணித்துவிட முடியாத அளவு இருந்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

Related image

ரஜினியுடன்  ‘பாபா’ பட விவகாரத்தில் நேரடியாக பாமக மோத, திரைத்துறையில் இருந்து தனது கடுமையான கண்டனத்தை கொடுத்தார் விஜயகாந்த். மேலும் அது விஜயகாந்த் v/s பாமக மோதலாக வெடித்தது. பாமகவுடன் விசிகவும் இணைந்து கொண்டு விஜயகாந்தை நேரடியாக எதிர்த்தது. அதன் பிறகு பாமகவை அதன் கோட்டையிலேயே சென்று சந்திக்கிறேன் எனக் கூறிய விஜயகாந்த, விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியை தேர்ந்தெடுத்து போட்டியிட்டு வென்று காட்டினார். ஆக, ஏதோ ஒரு வகையில் பாமக எதிர்ப்பில் விஜயகாந்த் வளர்ந்தார் என்றே சொல்ல வேண்டும். அதற்கு அவருக்கு பின்புலமாக இருந்தது அரசியல் பலம் அல்ல; சினிமா புகழ். ஏறக்குறைய 1979ல் ‘அகல் விளக்கு’படத்தில் தனது திரைப்பயணத்தை ஆரம்பித்த விஜயகாந்த், 2010 ‘விருதகிரி’ 149 படங்கள் வரை நடித்து முடித்து புகழின் உச்சியில் இருந்தார். அந்த ஒரே பலம் அவருக்கு அரசியல் பலமாக உருவெடுத்தது. 

Image result for Vijayakanth in Assembly

இந்தத் தேர்தலில் மட்டும் 3 தொகுதிகளில் 20% அதிகமான வாக்குகளையும், 8 தொகுதிகளில் 15% லிருந்து 20% வரையான வாக்குகளையும், 33 தொகுதிகளில் 10% லிருந்து 15% வரையான வாக்குகளையும், 48 தொகுதிகளில் 7% லிருந்து 10% வரையான வாக்குகளையும் 2006 தேர்தலில் இவரது கட்சியின் வேட்பாளர்கள் பெற்றனர். இந்த செல்வாக்குதான் 2011 சட்டமன்றத் தேர்தலில் இவருக்கு அதிமுக கூட்டணியில் 41 இடங்களை ஒதுக்க இடம் அளித்தது. அப்படி பார்த்தால் ஏறக்குறைய 6 பாராளுமன்றத் தொகுதிகளை அதிமுக கொடுத்ததாக ஒரு கணக்கை முன்வைக்கலாம். 41 இடங்கள் ஒதுக்கப்பட்டாலும் 29 இடங்களில் வென்று திமுகவிற்கு எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கிடைத்து வந்த எதிர்க்கட்சி அந்தஸ்தையும் தட்டிப் பறித்தது தேமுதிக. இது தமிழக அரசியலில் ஒரு வரலாற்று சாதனை.

Related image

ஆக, எந்தக் கணக்கை வைத்து பார்த்தாலும் பாமகவைவிட அரசியல் அரங்கில் தேமுதிக பெரிய கட்சியாக வளர்ந்துள்ளது. 2005ல் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய தேமுதிக, 2011ல் தமிழக சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியாக தன்னை வளர்த்து கொண்டது. 6 ஆண்டுகளில் இந்தக் கட்சி இந்த வளர்ச்சியை பெற்றுள்ளது. ஆரம்ப காலத்தில் 10% வாக்கு வங்கியை வைத்திருந்த தேமுதிக, 8.1% அதன்பின் 5.4%, அதற்கடுத்து 2.39 சதவீதம் என மாறிமாறி தன் செல்வாக்கினை தடம் பதித்து வருகிறது. ஆனால் 1989ல் ஆரம்பிக்கப்பட்ட பாமக, இதுவரை தேமுதிகவின் வளர்ச்சியை ஒப்பிடுகையில் பெரும் கட்சியாக வளரவில்லை. பல கட்ட முயற்சிகளுக்கு பிறகும் கூட பாமகவின் வாக்கு வங்கி, 5% க்கும் மேலாக நிலையாக இருந்து வருகிறது.

Image result for விஜய பிரபாகரன்

இந்நிலையில்தான் தேமுதிக மீது ஆளும் கட்சியின் கவனம் அதிகம் விழுந்துள்ளது. ஒரு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும்போதே விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், அதிரடியான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். “நான் தினமும் காலையில் என் அப்பா முகத்தை பார்க்கிறேனோ இல்லையோ, எல்லா கட்சி தலைவர்களும் என் அப்பாவை வந்து வந்து பார்த்துவிட்டு போகிறார்கள்” எனத் துணிச்சலாக எதிர்க்கட்சிகளை தன் பேச்சுக்களால் உரசுகிறார்.  

பிரபாகரனின் பேச்சுக்கு, அமைச்சர்கள் பதில் கொடுக்கும் அளவுக்கு முன்னேற்றி இருக்கிறது அதிமுக அரசியல் களம். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘சின்னப் பையனை வைத்து பேச வைக்க வேண்டாம். உங்களுக்கு கட்சி அங்கீகாரம் வாங்கி கொடுத்ததே அதிமுகதான்’ என்று கூறியிருக்கிறார். 

Related image

தமிழக அரசியல் களத்தில் பலநேரங்களில் ஒரு சதவீத வாக்கு வித்தியாசம்கூட ஆட்சியை அமைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது. ஆக, ஒரு சதவீதம் என்பது ஆட்சியையே தீர்மானிக்கும் என்பதை அதிமுகவும் திமுகவும் உணர்ந்துள்ளது.ஆகவேதான் கடந்த தேர்தலின் போதுகூட மு.கருணாநிதி, தேமுதிக கூட்டணி குறித்த பேச்சை மிக எச்சரிக்கையாக கையாண்டார். ‘பழம் கனிந்துவிட்டது. பாலில் விழும்’ என்று பக்குவம் காட்டினார் அவர். அதேபோல் அவருக்கு பாமக மீதும் ஒரு கண் இருந்தது. அக்கட்சி தனது கட்டுப்பாட்டில் 20 தொகுதிகளை வைத்திருக்கிறது. வடமாவட்டங்களில் இக்கட்சிக்கு 10% வாக்கு வங்கி இருக்கிறது. ஆகவே இந்த முறை அதிமுகவும் திமுகவும் தேமுதிக இழுப்பதிலும் பாமகவை இழுப்பதிலும் மிக நிதானப்போக்கை கடைப்பிடிக்க தொடங்கியுள்ளன.  

Image result for DMDK

இந்த அரசியல் கணக்கில் கொங்கு வட்டத்தில் எடப்பாடிக்கு பக்கபலமாக பாமகவின் செல்வாக்கு உதவும் என்பதில் ஐயமில்லை. எடப்பாடிக்கு எது எப்படி என்றாலும் பாமக ஒரு வலுவான சக்தி. அதேநேரம் தேமுதிக தமிழகம் தழுவிய ஒரு செல்வாக்கை வைத்துள்ளது. அதுவும் அதிமுக பக்கம் போனால் அது அதிமுகவிற்கு யானை பலம். ஆகவேதான் தேமுதிக கொஞ்சம் நின்று பேரம் பேசுகிறது. ஒரே சமயத்தில் அதற்கு அதிமுக அனுகூலம், திமுகவின் அரவணைப்பும் உள்ளது. இந்தச் செல்வாக்கு பாமகவிற்கு கிடைத்ததில்லை. ஓட்டு அரசியலில் பொறுத்தளவில் பாமக என்பது தேமுதிக என்ற இளைய சக்திக்கு முன் கொஞ்சம் பின்தங்கியே இருக்கிறது. இப்போது விஜயகாந்தின் அரசியல் பேரமும் இந்தப் பின்னடைவை முன்வைத்தே முன்னேற முயற்சிக்கிறது.   

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : DMDKPMK
Advertisement:
Advertisement:
[X] Close