[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

சட்டப்பேரவையில் ஆங்கிலோ இந்தியன் நியமன எம்எல்ஏ நியமிக்கப்படுவதன் பின்னணி

anglo-indian-mla

ஆங்கிலோ இந்தியன் நியமன எம்எல்ஏ எதன் அடிப்படையில் நியமனம் செய்யப்படுகிறார். அவருடைய பணிகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அரசியல் சட்டப்பிரிவு 333 ன் படி, சட்டமன்றங்களில், ஆங்கிலோ இந்திய மக்களுக்கு உரிய பிரிநிதித்துவம் இல்லாத பட்சத்தில், அந்த சமுதாயத்தில் இருந்து ஒருவரை நியமன எம்எல்ஏவாக நியமனம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது. நியமிக்கப்படும் எம்எல்ஏவுக்கு மற்றவர்களுக்கு உள்ளது போல், ஆண்டிற்கு ரூ. 2 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ.10 கோடி தொகுதி மேம்பாட்டு நிதியாக வழங்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் ஆங்கிலோ இந்தியர்கள் 45 ஆயிரத்துக்கும் அதிகமனோர் வசிக்கின்றனர். அவர்களுக்கென தனியாக பள்ளிகளும் இயங்கி வருகின்றன. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர், ஆங்கிலேயேர்கள் இந்தியா வந்து வணிகம் செய்து, இங்கேயே தங்கி, தங்களுக்கான இணையர்களை தேர்ந்தெடுத்தனர். அதன் அடிப்படையில் அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் 2 நியமன எம்பிக்களுக்கும், எட்டு மாநிலங்களில், தலா ஒரு நியமன எம்எல்ஏவும் வழங்கி பிரிநிதித்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:

[X] Close